காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வெள்ளி பல்லாக்கில் வெறும் பலகை மட்டும் இருப்பதாக புகார்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வெள்ளி பல்லாக்கில் வெறும் பலகை மட்டுமே இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

Recommended Video

    வெள்ளி பல்லாக்கில் வெறும் பலகை மட்டும் உள்ளது.. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் எழுந்த புகார் - வீடியோ

    தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த நகைகளை 3 மாதத்திற்கு ஒருமுறை, நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஒவ்வொரு கோயிலாக சென்று ஆய்வு செய்வது வழக்கம்.

    மாமியார்-மருமகள் சாப்பாட்டை ஊட்டிக் கொண்டால் பில்லே கிடையாது.. புதுச்சேரி ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு மாமியார்-மருமகள் சாப்பாட்டை ஊட்டிக் கொண்டால் பில்லே கிடையாது.. புதுச்சேரி ஹோட்டல் அசத்தல் அறிவிப்பு

     நகை சரிபார்ப்பு அலுவலர்கள்

    நகை சரிபார்ப்பு அலுவலர்கள்

    அந்த ஆய்வின்போது, கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நகை, ஏற்கனவே உள்ள நகை விவரங்களை அறிக்கையாக இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகை சரிபார்ப்பு அலுவலர்கள், ஆய்வு பணிக்கு செல்லவில்லை என புகார் கூறப்படுகிறது.

     சோமாஸ்கந்தர் சிலை வழக்கு

    சோமாஸ்கந்தர் சிலை வழக்கு

    இது தொடர்பாக புகார்கள் வந்தால் மட்டுமே ஆய்வு செய்கின்றனர் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதற்கிடையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது.

     பல்லாக்கில் பலகைதான் இருக்கு

    பல்லாக்கில் பலகைதான் இருக்கு

    இதுதொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக திருக்கோயிலின் வைர, வைடூரிய நகைகள் திருடு போனது, வெள்ளிப் பொருள்கள் மாயமானது குறித்தும், முறைகேடுகள் பற்றியும் பக்தர்கள் தொடர்சியாக இந்து அறநிலைய துறையிடம் புகார் தெரிவித்தனர் மேலும் அங்கு உள்ள வெள்ளி பல்லாக்கில் வெள்ளியின் எடை குறைந்து வெறும் பலகை மட்டுமே உள்ளதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

     காஞ்சியில் ஆய்வு

    காஞ்சியில் ஆய்வு

    இந்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள நகைகளை, நகை சரிபார்ப்பு அலுவலர் எஸ்.எஸ்.குமார், துணை அலுவலர் சுப்பிரமணி, உதவி தொழில்நுட்ப அலுவலர் ஹரிஹரன் ஆகியோர் திடீரென சரிபார்ப்புப் பணியில் ஈடுபட்டனர். வெள்ளி பல்லாக்கு குறித்து அலுவலரிடம் கேட்கும்போது, எடையை சரிபார்த்து அறநிலைய துறையிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றார்.

    English summary
    HRCE officials inspect Kanchipuram Ekambareswarar Temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X