காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்கள் கையில் எடுத்திருப்பது மாற்று அரசியல்.. போர்க் குண அரசியல் அல்ல.. கமல்ஹாசன் விளக்கம்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: நாங்கள் கையில் எடுத்திருப்பது மாற்று அரசியலே தவிர போர்க் குண அரசியல் அல்ல என கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம், செய்யாறில் தேர்தல் பிரச்சாரங்களை முன்வைத்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

அவர் காஞ்சிபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மாநில சுயாட்சி பேசிய அண்ணாவின் கட்சி இன்று மாநில உரிமைகளை எல்லாம் விட்டு கொடுத்து ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறது, நாராசமான அந்த சென்ட்ரல் இசைக்கு.

காஞ்சிபுரம் அண்ணா இல்லத்தை பார்வையிட்ட கமல்ஹாசன்.. பார்வையாளர் புத்தகத்தில் எழுதியது என்ன?காஞ்சிபுரம் அண்ணா இல்லத்தை பார்வையிட்ட கமல்ஹாசன்.. பார்வையாளர் புத்தகத்தில் எழுதியது என்ன?

அடிமை

அடிமை

சித்தாந்தத்திற்கு அடிமையாகி போனவர்கள் மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை சித்தாந்தத்தை விட்டு கொடுக்க மாட்டோம் என சொல்வது என்ன அர்த்தம். சட்டம் இயற்றுவதே மக்களுக்காகத்தான் அந்த சட்டம் மக்களுக்கு பயன்படவில்லை எனில் அதை மாற்ற வேண்டும்.

கேட்காத அரசியல்

கேட்காத அரசியல்

ஆராய்ச்சி மணி அடிக்கப்பட்டால் அதை கேட்காத அரசால் நல்ல ஆட்சியை கொடுக்க முடியாது. சென்ட்ரிஸம் (நடுவு நிலைமை) என்பதற்கு பேர் போன இடம் காஞ்சிபுரம். ஒரே நேரத்தில் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் சைவ, வைணவ, சமண, பௌத்த வழிபாடுகளில் நம்பிக்கை உடையவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் உரத்த குரலில் பேசும் சுதந்திரத்தையும் சவுகரியத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த அந்த வள்ளுவன் சொன்ன நடுவு நிலைமைதான் சென்ட்ரிஸம்.

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

60 வருடங்களாக புகழ் வெளிச்சம் அவ்வப்போது என் மீது படும். 5 வயது முதல் பார்த்து வருகிறேன். அதையெல்லாம் தாண்டிய ஒரு அன்பை இப்போது நான் பார்த்து வருகிறேன். இத்தகைய கூட்டத்தை நான் பார்த்திருக்கிறேன், ஆனால் எப்போதாவது ஒரு தடவை, ஏதாவது விழாக்கள், நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளும் போது பார்த்துள்ளேன்.

பகுத்தறிவாளன்

பகுத்தறிவாளன்

ஆனால் சென்ற இடங்கள் எல்லாம் இது போன்ற கூட்டத்தை இப்போதுதான் பார்க்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு எழுச்சி, அது தமிழகத்தின் எழுச்சியாக மாறும் என நம்புகிறேன். நான் நாத்தீகன் அல்ல.நாத்தீகன் என்பது ஆத்தீகன் கொடுத்த பெயர், அதை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன். நான் பகுத்தறிவாளன். எதையும் பகுத்தறிந்து அதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.

என்ன அரசியல்

என்ன அரசியல்

இதற்கு அடுத்த கட்டமாகத்தான் நடுவுநிலைமை என்ற நிலையை எடுத்துள்ளேன். இது படிப்படியாக என்னுள் வரும் வளர்ச்சி. எல்லாருக்கும் அவரவர் சிந்தனை இருக்கிறது என்ற புரிதலே ஒரு விதமான பகுத்தறிவுதான். இப்போது நடக்கும் அரசியல் எப்படி நடக்கிறது தெரியுமா?

எதிரிகள்

எதிரிகள்

இவர் மாற்று கருத்து சொல்லிவிட்டால், அவர் எதிரி. எங்கள் எதிரிகளை நாங்கள் வெட்டி வீழ்த்துவோம் என்று சொல்லும் அந்த பழைய கால போர்க் குண அரசியல் அல்ல நாங்கள் செய்வது. எல்லாரும் எப்படி சுதந்திர போராட்டத்திற்கு போராடினோமோ அப்படித்தான் இதை செய்ய வேண்டுமே தவிர மாற்றுக் கருத்து உள்ளவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அவர்களது கருத்தை மறுக்கலாம்.

English summary
Makkal Needhi Maiam President Kamal Haasan says that we are taking alternative politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X