காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினி கேட்டுகிட்டா மறுக்கமுடியுமா?.. நிச்சயமா ஒத்துக்குவேன்.. முதல்வர் பதவி குறித்து கமல் கருத்து

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டால் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது காஞ்சிபுரத்தில் அண்ணா நினைவு இல்லத்தை பார்வையிட்டார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ரஜினிகாந்துடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக கூறிவிட்டேன். அதன் பிறகு பிரச்சார வேலைகளில் இறங்கிவிட்டதால் நான் ரஜினியிடம் பேசவில்லை.

விஸ்வரூபம் எடுக்கும் கமல்ஹாசன்.. ஸ்ட்ரெயிட்டா பாயிண்டுக்கு வந்துட்டாரு.. ஆடிப்போன அதிமுக! விஸ்வரூபம் எடுக்கும் கமல்ஹாசன்.. ஸ்ட்ரெயிட்டா பாயிண்டுக்கு வந்துட்டாரு.. ஆடிப்போன அதிமுக!

டார்ச்லைட் சின்னம்

டார்ச்லைட் சின்னம்

டார்ச் லைட் சின்னத்தை நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் அதை எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. தற்போது அக்கட்சியினர் அந்த சின்னத்தை வேண்டாம் என கூறிவிட்டனர். இதனால் மீண்டும் டார்ச்லைட் சின்னத்தை பெற சட்டப் போராட்டம் நடத்துவோம்.

செழுமை

செழுமை

மக்களை வறுமை கோட்டிற்கு மேல் அல்லாமல் செழுமை கோட்டிற்கு மேல் வைப்பதே தங்கள் நோக்கம் என கமல்ஹாசன் தெரிவித்தார். பின்னர் ரஜினி கட்சி தொடங்கி சட்டசபைதேர்தலில் போட்டியிடுவேன், ஆனால் முதல்வர் வேட்பாளராக நிற்க மாட்டேன் என கூறியிருந்தார்.

ஒப்புக் கொள்வீர்களா

ஒப்புக் கொள்வீர்களா

ஒரு வேளை முதல்வர் வேட்பாளராக உங்களை நிற்க சொன்னால் ஒப்புக் கொள்வீர்களா என கமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கமல் கூறுகையில் ரஜினி கேட்டுக் கொண்டால் மறுப்பதற்கில்லை. அதனை நிச்சயம் நான் ஏற்பேன்.

பிரச்சினை

பிரச்சினை

நாங்கள் எங்களுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நீங்கள் பேசி முடிவு செய்தால் எப்படி. நான் பகுத்தறிவாளன், யாருடனும் உரையாடுவதில் தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்தார். எனவே ரஜினியும் கமலும் கூட்டணி சேர்ந்தால் ரஜினி யாரோ ஒருவரை முதலவராக்குவேன் என்பதற்கு பதிலாக ஏன் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

English summary
Kamal Haasan says that if Rajinikanth wants me to be a CM candidate then i will accept that.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X