காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. ஐஜி நம்பர் எங்கே".. மக்கள் முன்னிலையில் ஆவேசமான கலெக்டர்!

இன்ஸ்பெக்டரை கலெக்டர் பொன்னையா திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்கள் முன்னிலையில் ஆவேசமான கலெக்டர்!-வீடியோ

    காஞ்சிபுரம்: "தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. பித்தலாட்டம் பண்ணவா வந்தே? ஐஜி நம்பர் எங்கேப்பா.. இரு வரேன்.. உன்னை சஸ்பெண்ட் பண்ணாதான் சரியா வரும். திமிர்தனமா பண்றீங்க போலீஸ்காரங்க எல்லாம்" என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், இன்ஸ்பெக்டர் ஒருவரை தாறுமாறாக திட்டும் வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் அங்கு தினந்தோறும் நிரம்பி வழிகிறது.

    தரிசனத்தின் முதல் நாளில் இருந்தே அத்திவரதரை தரிசிக்க போலி பாஸ்களை பெற்று நிறைய பேர் தரிசனம் செய்து விட்டு போவதாக புகார்கள் எழுந்தபடி இருந்தது. மேலும் பணம் வாங்கி கொண்டு சிலர் பக்தர்களை உள்ளே அனுமதித்து விடுவதாகவும் கூறப்பட்டது.

    புது பொண்டாட்டியுடன் சண்டை.. பைக்கை நிறுத்திவிட்டு பாலத்திலிருந்து குதித்த ராணுவ வீரர்! புது பொண்டாட்டியுடன் சண்டை.. பைக்கை நிறுத்திவிட்டு பாலத்திலிருந்து குதித்த ராணுவ வீரர்!

    பாஸ்

    பாஸ்

    இப்படி பாஸ் இல்லாமல் விவிஐபிக்கள் செல்லும் வழியில் போலீசார் லஞ்சம் வாங்கி கொண்டு அழைத்து செல்வதாக மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு புகார்கள் நிறைய வந்து கொண்டே இருந்தன. இந்நிலையில், நேற்று இன்ஸ்பெக்டர் ஒருவர் பாஸ் இல்லாமல் ஒருசிலரை உள்ளே அழைத்து சென்றதாக தெரிகிறது.

    இன்ஸ்பெக்டர்

    இன்ஸ்பெக்டர்

    அந்த நேரம் பார்த்து அங்கு வந்த கலெக்டர் இதை நேரடியாக பார்த்ததும் கொதித்து போய் விட்டார். கையும் களவுமாக மாட்டிய இன்ஸ்பெக்டரை லெப்ட் & ரைட் வாங்கிவிட்டார். அப்போது கலெக்டர் இன்ஸ்பெக்டரிடம் பேசியது இதுதான்:

    தொலைச்சிடுவேன்

    தொலைச்சிடுவேன்

    "எந்த ஸ்டேஷன் நீ.. பித்தலாட்டம் பண்ணவா வந்தே? தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. ஐஜி நம்பர் எங்கேப்பா.. என்னத்த நீ செக் பண்ணி அனுப்பறே.. பாஸ் இல்லாம அங்கே அவ்ளோ பேர் உட்கார்ந்திட்டு இருக்காங்க. என்னய்யா செக் பண்றே? இரு வரேன்.. உன்னை சஸ்பெண்ட் பண்ணாதான் சரியா வரும். திமிர்தனமா பண்றீங்க போலீஸ்காரங்க எல்லாம். என்ன ஸாரி.. யோவ்.. அங்க எத்தனை பேர் நிக்கறாங்க பாத்தியா? ஐஜியை வரசொல்லுய்யா.. ஐஜிக்கிட்ட நான் பேசறேன். இன்னைக்கு நீ சஸ்பெண்ட் ஆகறே.." என்று ஆவேசமாக சொன்னார். இதை அங்கிருந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் வேடிக்கை பார்த்தனர்.

    ஆதங்கம்

    ஆதங்கம்

    அதில் சிலர் கலெக்டர் சத்தம் போடுவதை வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் போட்டுவிடவும் அது வைரலாகி வருகிறது. கலெக்டர் பொன்னையாவின் ஆதங்கமும், கோபமும் நியாயம் ஆனதே.. கண்டிப்பும் அவசியமே.. பாஸ் இல்லாமல் உள்ளே அனுமதிக்கப்படும் செயலில் சம்பந்தப்பட்டவர் இந்த இன்ஸ்பெக்டர் மட்டுமே இருக்க முடியாது. வேறு சிலருக்கும் தொடர்பிருக்கலாம். அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் "திமிர்தனமா பண்றீங்க போலீஸ்காரங்க எல்லாம்" என்று ஒட்டுமொத்தமாக அனைத்து காவலரையும் பேசியிருக்க கூடாது என்றே தோன்றுகிறது.

    உயிரிழப்பு

    உயிரிழப்பு

    ஏனெனில், இதே அத்திவரதர் கூட்ட நெரிசலை சமாளிக்க ஆயிரக்கணக்கான போலீசார் சிக்கி திணறி கடமையாற்றி வருகிறார்கள். 2 தினங்களுக்கு முன்பு கூட ஒரு போலீஸ்காரர் நெஞ்சை பிடித்து கொண்டே இறந்துவிட்டார். விஐபிக்கள் தரிசன வரிசையில் சில தினங்களுக்கு முன்பு மின்கசிவு ஏற்பட்டபோது, பக்தர்களுடன் காயமடைந்தது அங்கு நின்று கொண்டிருந்த போலீசாரும்தான். அதனால் ஒருசிலரது நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த போலீஸையும் குற்றம் சாட்டுவதோ, அல்லது ஒருமையில் திட்டுவதோ ஏற்க முடியவில்லை... அதுவும் ஒரு கலெக்டரே இப்படி பேசியதுதான் கொஞ்சம் நெருடலாக உள்ளது.

    English summary
    Kancheepuram District Collector Ponnaiyan shouting on Police Inspector and this Video goes viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X