• search
காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"காப்பாத்துங்க.. காப்பாத்துங்க".. வாட்ஸ்ஆப்பில் கதறிய பெண்.. அடுத்து நடந்த பயங்கர விபரீதம்!

|

காஞ்சிபுரம்: "என்னை காப்பாத்துங்க.. என் அப்பா, அம்மாவால் என் உயிருக்கு ஆபத்து இருக்கு" உயிரிழப்பதற்கு முன்பு இளம்பெண் மாதர் சங்கத்துக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி உள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது. உத்தரமேரூரில் இளம்பெண்ணை பெற்ற தந்தையே கொன்று, சடலத்தை பாத்ரூமில் இழுத்து போட்ட சம்பவத்தில் அடுத்தடுத்த பகீர்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வெங்கடய்யாபிள்ளை தெருவில் வசிப்பவர் பாலாஜி... இவர் உத்திரமேரூர் தீயணைப்பு ஆபீசில் வேலை பார்த்து வருபவர்.. பல்வேறு வரலாற்று கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருபவர். இவர் மனைவி ஜெயந்தி.. மகள் பெயர் செந்தாரகை. 23 வயதாகிறது.

கடந்த மே 24ம் தேதி யுவராஜ் என்பவருக்கும் செந்தாமரைக்கும் எளிய முறையில் கல்யாணம் நடந்தது.. இதையடுத்து வண்டலூர் பகுதியில் புதுமண தம்பதிகள் வசித்து வந்தனர்.

பாத்ரூமில் இளம் பெண் சடலம்.. கழுத்தில் காயம்.. அடக்கம் செய்ய முயன்ற அப்பா.. அதிர வைத்த காஞ்சிபுரம்

 போலீஸ்

போலீஸ்

ஜுன் மாத கடைசியில் லாக்டவுன் போடப்படவும், செந்தாரகை அம்மா வீட்டுக்கு வந்திருந்தார்.. பிறகு கடந்த 8-ம் தேதி பாத்ரூமில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.. ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டதை குறித்து பெற்றோர் போலீசில் எந்த தகவலையும் சொல்லவில்லை.. புகாரும் தெரிவிக்கவில்லை.

மர்மம்

மர்மம்

யாருக்கும் தெரியாமல் உடலை ரகசியமாக புதைக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விஷயம் எப்படியோ போலீசாரின் காதுகளுக்கு எட்டி, அதன் அடிப்படையில் சசெந்தாரகையின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, செந்தாரகையின் உறவினர்கள், சாவில் மர்மம் இருப்பதாக உத்திரமேரூர் போலீசிலும் புகார் தந்தனர்.

 கழுத்தில் காயம்

கழுத்தில் காயம்

இந்த சமயத்தில், செந்தாரகையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில், அவரது கழுத்து பகுதியில் காயம் உள்ளதாகவும், கழுத்து நெரிக்கப்பட்டுதான் உயிர் பிரிந்திருக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.. இதையடுத்து, மதுராந்தகம் எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் செந்தாராகையின் அப்பா பாலாஜியை அதிரடியாக கைது செய்தனர்.

மறுப்பு

மறுப்பு

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், மகளை தான் தான் கழுத்தை நெரித்து கொன்றதாக ஒப்புக் கொண்டார். கல்யாணத்துக்கு முன்பே ஒருவரை செந்தாரகை விரும்பி இருக்கிறார்.. ஆனால் அந்த காதலை ஏற்க மறுத்ததுடன், இந்த கல்யாணத்தை கட்டாயப்படுத்தியும் பெற்றோர் செய்து வைத்துள்ளனர்.. அப்போதிருந்தே மன உளைச்சலுடன் செந்தாரகை காணப்பட்டதாக சொல்கிறார்கள்.. மேலும் வீட்டை விட்டு வெளியே செல்லவும் தடை போடப்பட்டிருக்கிறது.

உயிரிழப்பு

உயிரிழப்பு

கல்யாணம் செய்து வைத்தது தொடர்பாக பிரச்சனை தினந்தோறும் வீட்டில் வெடித்து வந்திருக்கிறது.. சம்பவத்தன்றும் கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது.. இதில் ஆத்திரமடைந்துதான், பெற்ற மகளின் கழுத்தை பாலாஜி நெரித்து கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது... மேலும் உயிரிழப்பதற்கு முன்பு செந்தாரகை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலாளருக்கு ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார்.

 மெசேஜ்

மெசேஜ்

அதில், "என் அப்பா, அம்மாவால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது.. உடனடியாக என்னை வந்து மீட்டு செல்லுங்கள்.. ஒருவேளை அதற்குள் எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு தன் பெற்றோர்தான் காரணம்" என்று மெசேஜ் அனுப்பி வைத்திருந்தாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பெற்ற மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவத்தின் அதிர்ச்சி உத்தரமேரூரில் இன்னும் அடங்கவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
kancheepuram girl murder case issue, father arrested
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X