காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா ஊராடங்கு 6.0: பிற மாவட்டத்தினர் காஞ்சிபுரத்திற்குள் நுழைய தடை - கலெக்டர் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தரப்பினர் ஒத்துழைப்புடன் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி நோய் பரவுதலை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது தங்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாகவும், ஊரடங்கு காலத்தில் பிற மாவட்டத்தினர் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் அனைத்து தரப்பினர் ஒத்துழைப்புடன் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி நோய் பரவுதலை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டத்தின் பிற பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் கடைகள் செயல்படவும் , உணவகங்கள் இரவு 8 மணி வரை பார்சல் வழங்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் இறைச்சிக் கடைகள் 2 நாட்கள் திறக்க. அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Kanchipuram district collector press meet about Lock down 6.0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஆறாம் கட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து தரப்பினர் ஒத்துழைப்புடன் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி நோய் பரவுதலை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்.. ஆச்சர்யம் தரும் கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்.. ஆச்சர்யம் தரும் "டெக்சாமெத்தசோன்" மருந்து.. ஹு நல்ல செய்தி!

முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தும் நாளைக்கு முன்பு சென்னையில் உள்ள தொழிலாளர்களை அழைத்து வந்து தொழிற்சாலைக்குள் அல்லது தொழில்சாலை அருகிலேயே தங்க வைத்து அவர்களை பணியில் அமர்த்தலாம் தினசரி தொழிற்சாலை பேருந்து மூலமாகவோ அல்லது இருசக்கர வாகனத்திலேயே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட கூடிய பகுதியில் இருக்கும் தொழிலாளர்களை மற்ற பகுதிகளில் பணியமர்த்த அனுமதி கிடையாது. ஊரடங்கு அமல்படுத்த படக்கூடிய பகுதியில் இருக்கக்கூடிய தொழிலாளர்களை ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதற்கு முன்பே தொழிற்சாலைகளில் தங்கவைத்து அவர்களை பணிக்கு அமர்த்திக் கொள்ளலாம்

மாவட்டத்தின் பிற பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில் கடைகள் செயல்படவும் , உணவகங்கள் இரவு 8 மணி வரை பார்சல் வழங்கலாம் எனவும் , இறைச்சிக் கடைகள் இரண்டு நாட்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

மாவட்ட ஆட்சியரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி,பிற மாவட்டத்திலிருந்து மதுபானங்கள் வாங்க வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தவறு நடக்கும் பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார்.

English summary
Kanchipuram district collector Ponniah said that press persons talking about coronavirus lockdown 6.0.In the Kanchipuram district, essential commodities were made available during the entire curriculum and other persons were barred from entering the district during the curfew. He added that all parties in the district should cooperate with curfews and curb the spread of the disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X