காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை-சேலம் எட்டுவழி சாலைக்கு எதிர்ப்பு- காஞ்சிபுரம் விவசாயிகள் கறுப்புக் கொடி போராட்டம்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: சென்னை- சேலம் எட்டு வழி சாலை திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்

சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளதை எதிா்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

விமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா? சீமான்விமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா? சீமான்

 Kanchipuram Farmers hold protest against Chennai-Salem Expressway

இதைக் கண்டித்து எட்டு வழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் மீண்டும் போராட்ட களத்தில் இறங்கி உள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள சீதாவரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 Kanchipuram Farmers hold protest against Chennai-Salem Expressway

மேலும் அவர்கள் தங்களுடைய விவசாய நிலங்களில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். மேலும் கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கியிருந்த நேரத்தில் அவா்களுக்கு உணவு வழங்கிய விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிப்பது மிக மோசமான செயல் எனவும் முழக்கங்கள் எழுப்பினர்

எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 Kanchipuram Farmers hold protest against Chennai-Salem Expressway
English summary
Kanchipuram Farmers hold Black Flag protest against the Chennai-Salem Expressway Project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X