காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் கட்சியினரை அதிர வைத்த நோட்டா.. கிருஷ்ணகிரி, காஞ்சிபுரத்தில் அதிகளவில் பதிவு

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில், அதிகளவில் நோட்டாவிற்கு வாக்களிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றன இந்நிலையில் வேலூர் தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை முதல் நடைபெற்று வருகிறது

Kanchipuram Lok Sabha polls where political parties are scattered.. NOTA High level registration

இதில் சுமார் 37 மக்களவை தொகுதிகளில் திமக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர் காஞ்சிபுரம் மக்களவை தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் ஏற்கனவே எம்பியாக உள்ள அதிமுகவை சேர்ந்த மரகதம் குமவேல் மற்றும் திமுக வேட்பாளர் செல்வம் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் துவக்கம் முதலே திமுக வேட்பாளர் செல்வம் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்தார். தற்போதையை நிலவரப்படி லட்சத்திற்கும் மேலான வாக்குகளை பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

மேலும் அண்மையில் கிடைத்த தகவலின் படி காஞ்சிபுரம் தொகுதியில் நோட்டாவிற்கு சுமார் 11,532 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. அதே போல கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் சுமார் 18,000 வாக்குகள் நோட்டாவில் செலுத்தப்பட்டுள்ளன

நோட்டா என்பது None of The Above என்பதாகும். இதன் பொருள் மேலே உள்ள எவரும் அல்ல என்பதாகும். எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற ஆப்ஷனை சுமார் 11,532 பேர் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் தேர்வு செய்திருப்பதும் கிருஷ்ணகிரியில் சுமார் 18,000 பேர் தேர்வு செயதிருப்பதும் கட்சியினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது

English summary
The counting of votes recorded in the Lok Sabha constituencies has been taking place all over the country, and in this situation the Kanchipuram Lok Sabha constituency has been the most NOTA voted issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X