காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கண்ணு படப் போகுதய்யா... 100 பேரன் பேத்திகள் புடைச்சூழ.. 100வது பிறந்தநாள் கொண்டாடிய பொன்னம்மாள்!

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே மூதாட்டியின் 100-வது பிறந்தநாள் விழா திருவிழா போல் கொண்டாடப்பட்டது. 100 பேரன்,பேத்திகள் முன்னிலையில் கேக் வைட்டினார் மூதாட்டி.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அதற்கேற்ப இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொருவரும் நோயில்லாத வாழ்வு வேண்டும் என்பார்கள். இந்த மண்ணில் இருக்கும் போது சரி, மண்ணை விட்டு விண்ணுக்கு செல்லும் காலகட்டத்திலும் சரி, நோய் வாய் படாமல் நல்லபடியாக போக வேண்டும் என்றுதான் நினைப்பார்கள்.

அது போல் யார் வாழ்த்தினாலும் 100 வயசு வரை நல்லாயிருக்கணும் என நம்மை பிறரும், பிறரை நாமும் வாழ்த்துவது தொன்று தொட்டுவரும் வழக்கமாகும். 100 வயசு வரை இருப்போமா என சிலருக்கு சந்தேகம் கூட எழுகிறது.

இது கன்னட, தெலுங்கு, மலையாள மொழியினருக்கு செய்யும் திராவிட துரோகம்.. சொல்கிறார் எச். ராஜாஇது கன்னட, தெலுங்கு, மலையாள மொழியினருக்கு செய்யும் திராவிட துரோகம்.. சொல்கிறார் எச். ராஜா

100-ஆவது பிறந்தநாள்

100-ஆவது பிறந்தநாள்

ஆனால் 100 வயது வரை எந்தவித நோய் நொடி இல்லாதவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என பெருமைப்படுகிறார்கள் ஆனம்பாக்கம் கிராமத்தினர். ஆம் அந்த கிராமத்தில் பாட்டி ஒருவர் இன்று 100-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் குறித்த செய்தித் தொகுப்பை பார்ப்போம்.

பொன்னம்மாள்

பொன்னம்மாள்

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள ஆனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராகவன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தினார். இவரது மனைவி பொன்னம்மாள். இவர் இந்த ஆனம்பாக்கம் கிராமத்தை சுற்றியுள்ள பெண்களுக்கு இயற்கை வைத்தியம் பார்த்து வருகிறார். இன்று இந்த பொன்னம்மாளுக்கு 100-வது பிறந்தநாள் ஆகும்.

கேக் வெட்டிய பாட்டி

கேக் வெட்டிய பாட்டி

இந்த பிறந்தநாள் விழாவை திருவிழா போல் ஏற்பாடு செய்துள்ளனர் ஆனம்பாக்கம் கிராம மக்கள். பல இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள், பலூன், மாலை பந்தல் என பல ஏற்பாடுகளுடன் கேக் வெட்ட வைத்து நடனமும் ஆட வைத்துள்ளனர் மூதாட்டியின் பேரன்கள்.

100 பேரன் பேத்தி

100 பேரன் பேத்தி

100 பேரன், பேத்தி நடனத்தில் பாட்டியின் நடனமும் களை கட்டியது. இந்த பாட்டி கிராம மக்களுக்கு பல ஆண்டுகளாக செய்த உதவிக்காக இன்று பிரம்மாண்ட விழாவாக பிறந்தநாள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலம் இல்லாமல் இருந்திருந்தால் இந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டமே வேற லெவல்தான் என்கின்றனர் ஆனம்பாக்கம் கிராம மக்கள்.

English summary
Kanchipuram Ponnammal celebrates her 100th birthday with 100 grand children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X