காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம் சார் பதிவாளர் அலுவலக பத்திர எழுத்தாளர் கொரோனாவால் பலி.. பயத்தில் பத்திரம் எழுதிய மக்கள்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர எழுத்தாளர் கொரோனாவால் பலியானதையடுத்து, தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அலுவலகம் இயங்கி வருகிறது.

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் 2 மற்றும் 4 ஆகிய அலுவலகத்தில் பத்திர எழுத்தராக இருந்தவர் கோவிந்தராஜ். கொரோனா வைரஸ் தொற்றால் கோவிந்தராஜ், சமீபத்தில் உயிரிழந்தார்.

Kanchipuram sub registrar office on alert after an employee lost his life due to corona

இதனைத்தொடர்ந்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மற்றும் பதிவு செய்ய வரும் பொது மக்கள் அனைவரும் கண்டிப்பாக சமுதாய இடைவெளியை பின்பற்ற வேண்டும், கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என சார் பதிவாளர்கள் மகாலட்சுமி மற்றும் சார்பதிவாளர் பொறுப்பு பிரகாஷ் ஆகியோர் உத்தரவிட்டனர்.

முழு லாக்டவுன்: விமான சேவைகள் வழக்கம் போல இயங்கும்- சென்னை விமான நிலையம்முழு லாக்டவுன்: விமான சேவைகள் வழக்கம் போல இயங்கும்- சென்னை விமான நிலையம்

இதன்பேரில் அனைவரும் முக கவசத்துடன் பணிபுரிகின்றனர். மேலும் பத்திரப்பதிவு செய்யும் வரும் பொது மக்களுக்கும் கை கிருமி நாசினி திரவம் வழங்கி சமுதாய இடைவெளிகளுடன் பத்திரப் பதிவு நடைபெறுகிறது.

Kanchipuram sub registrar office on alert after an employee lost his life due to corona

இதனிடையே, கோவிந்தராஜுடன் பழகியவர்கள் இப்போது கொரோனா அச்சத்தில் உள்ளனராம். இதில் பத்திரம் எழுதியவர்களும் கூட உண்டு.

English summary
The office is being operated with precautions following the death of a employee due to corona in the Kanchipuram office of the registrar. Govindaraj who has died was a writter in the office at the Kanchipuram sub registrar office.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X