காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கஜா புயல் நேரத்தில சூழ்நிலை சரியில்ல… அதான் மோடி வரல.. அதிமுகவின் சூப்பர் விளக்கம்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, சூழ்நிலைகள் சரி இல்லாததால் பிரதமர் மோடியால் பார்வையிட முடியாமல் போனதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி சேருமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் விஜயகாந்த் உள்ளார்.

இந்நிலையில் லோக்சபா கூட்டணி தொடர்பாக தேமுதிக உடன் ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார். காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த 10 குழந்தைக்கு தங்க மோதிரங்களை அவர் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சொந்த ஊரான ராமநாதபுரத்தில் கமல் போட்டி? மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அழுத்தம் சொந்த ஊரான ராமநாதபுரத்தில் கமல் போட்டி? மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அழுத்தம்

துரோகம் செய்த டிடிவி

துரோகம் செய்த டிடிவி

அப்போது அவர் கூறியதாவது: துரோகம் செய்து அரசியலுக்கு வந்தவர் டிடிவி தினகரன், எனவே அவரை மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டனர். அவருக்கு அரசியல் எதிர்காலமும் இல்லை.

சூழல் சரியில்லை

சூழல் சரியில்லை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, சூழ்நிலைகள் சரியில்லாததால் பிரதமர் மோடியால் பார்வையிட முடியாமல் போனது. இருப்பினும் பிரதமரின் உத்தரவின் பேரில் முதல்வரும், துணை முதல்வரும் பார்வையிட்டு பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

வைகோ போராட்டம்

வைகோ போராட்டம்

வைகோ என்பவர் ஏதோ ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டத்தின் முக்கியம் என்னவென்று ஆராயாமலே போராட்டம் நடத்தி வருகிறார்.

ரகசிய பேச்சுவார்த்தை

ரகசிய பேச்சுவார்த்தை

பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவது தேவையில்லாத ஒன்று. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

English summary
Former minister and AIADMK deputy coordinator, KP munusamy said that Prime Minister Modi was unable to visit the areas due to the lack of problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X