காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஞ்சிபுரம் செங்கல்பட்டில் நிரம்பி வழியும் ஏரிகள் - ஊரப்பாக்கத்தில் ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்

நிவர் புயல் தாக்கத்தினால் கனமழை கொட்டித்தீர்த்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஊரப்பாக்கத்தில் ஊருக்குள் ஏரி நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆள

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயலால் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. பல ஏரிகளில் இருந்தும் உபரி நீர் வெளியேறி வருவதால் குடியிருப்பு பகுதிகள் மூழ்கத் தொடங்கியுள்ளன. பலரும் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஊரப்பாக்கத்தில் ஊருக்குள் ஏரி நீர் புகுந்து வெள்ளம் சூழ்ந்து வருகிறது.

Recommended Video

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 100% கொள்ளளவை எட்டிய 167 ஏரிகள் - வீடியோ

    வடகிழக்கு பருவமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டியது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியதால் கடந்த 3 தினங்களாவே பெருமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்த காரணத்தால் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.

    Lakes overflowing at Kanchipuram Chengalpattu - Floodwaters entering the town in Urapakkam

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோரத்தாண்டவம் ஆடிய நிவர் புயல் கரையை கடந்த போது விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. 2015ஆம் ஆண்டு வெள்ள சேதத்தை நினைவு படுத்தும் வகையில் புறநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    Lakes overflowing at Kanchipuram Chengalpattu - Floodwaters entering the town in Urapakkam

    காஞ்சிபுரம் - செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் நிரம்பியுள்ளன. இதன்படி, காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 148 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. 254 ஏரிகள் 75 சதவிகிதமும், 142 ஏரிகள் 50 சதவிகிதமும், 241 ஏரிகள் 25 சதவிகிதமும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டமும் 22 அடியை எட்டியதை அடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    Lakes overflowing at Kanchipuram Chengalpattu - Floodwaters entering the town in Urapakkam

    செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை 23.30 அடி கொள்ளளவு கொண்ட மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 17.40 அடியை எட்டியுள்ளது. 16.11 அடி கொள்ளளவு கொண்ட கொண்டங்கி ஏரி 13.5 அடி நிரம்பியுள்ளது. பொன்விளைந்த களத்தூர் ஏரியில் 11.9 அடி நீர் நிரம்பியுள்ளது. 16 அடி கொள்ளளவு கொண்ட கொளவாய் ஏரி 12.9 அடியை எட்டியுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. எந்தெந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    ஊரப்பாக்கத்தில் உள்ள ஏரி நீர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது ஏரி நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஊரப்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Most of the lakes in the Kanchipuram-Chengalpattu integrated district have reached full capacity due to the northeast monsoon and Nivar storm. Residential areas have begun to sink as surplus water is being pumped out of many lakes. Many have taken refuge on the terrace of their homes. In the suburbs, the town is flooded by lake water.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X