காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரே மேடையில் மு.க.ஸ்டாலினும்..சைதை துரைசாமியும்.. பங்காரு அடிகளார் இல்ல விழா..!

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : MK stalin and saidai duraisami standing on the same stage

    காஞ்சிபுரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் இல்ல மணவிழாவில் மு.க.ஸ்டாலினும், சைதை துரைசாமியும் ஒரே மேடையில் நின்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

    பக்தர்களால் அம்மா என்றழைக்கப்படும் பங்காரு அடிகளாருக்கு இரண்டு மகன்கள். மூத்தமகன் பெயர் அன்பழகன், இளையமகன் பெயர் செந்தில்குமார். அன்பழகன் அதிமுக அனுதாபியாக இருந்து ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அரசியல் வாசம் இல்லாமல் இருந்துவருகிறார்.

    mk stalin and saidai duraisami standing on the same stage

    பங்காரு அடிகளாரின் இளையமகன் செந்தில்குமார் தொடக்கம் காலம் முதலே திமுக ஆதரவாளர். கோபாலபுரம் இல்லத்திற்கு அடிக்கடி சென்று வரக்கூடியவர். மேலும், தனது சொத்து பஞ்சாயத்தை தீர்த்து வைக்க ஒரு காலத்தில் கருணாநிதியை நாடியவர் செந்தில்குமார். மேலும், திமுக தலைமையுடனும் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார் செந்திகுமார்.

    பொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை.. சு.சுவாமி கூறியதும் சரிதான்.. சீமான்பொருளாதாரத்தில் பாஜகவினர் கவனம் செலுத்தவில்லை.. சு.சுவாமி கூறியதும் சரிதான்.. சீமான்

    இவரது மகளுக்கு நேற்று மேல்மருவத்தூரில் திருமணம் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவர் மணமக்களை வாழ்த்துவதற்காக மேடையேறிய நேரத்தில் அந்த மேடையில் சைதை துரை சாமி நின்று கொண்டிருந்தர். ஸ்டாலின் வருகையை பார்த்து மேடையில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி.

    mk stalin and saidai duraisami standing on the same stage

    சைதை துரைசாமியை பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் கீழே இறங்க விடவில்லை..வாங்கண்ணே, வந்து நில்லுங்க..ஏன் போறீங்க என பிடித்து வைக்க, தர்ம சங்கடத்தில் நெளிந்த சைதை துரைசாமி, ஸ்டாலினுக்கு பக்கவாட்டில் வேறு வழியின்றி நின்று புகைப்படத்தில் தான் பளீச்சென வராதபடி கவனமாக இருந்துகொண்டார்.

    இதனைக் கவனித்த திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, தாமோ அன்பரசன் ஆகியோர் சைதை துரைசாமியை கலாய்த்து விட்டு சென்றனர்.

    2011 தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றியை எதிர்த்து வழக்குத்தொடர்ந்தவர் சைதை துரைசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    mk stalin and saidai duraisami standing on the same stage
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X