காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை என்றால் என்ன? குடிமக்களின் உரிமைகளை பறிப்பதுதான் குடியுரிமையா? ஸ்டாலின் நறுக்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அதில் காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். குடியுரிமை சட்டம் என்பது நாடாளுமன்றத்தில் கடந்த 11- இல் நிறைவேற்றப்பட்டது. 13-ஆம் தேதி திமுகவின் இளைஞரணி, மாணவரணி இணைந்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தின.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் போராட்டம்.. காஞ்சியில் களமிறங்கிய ஸ்டாலின்!குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக மாபெரும் போராட்டம்.. காஞ்சியில் களமிறங்கிய ஸ்டாலின்!

ஆட்சி

ஆட்சி

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலையில் கைது மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். போராடியவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்குகளுக்காக மூலையில் அஞ்சும் இயக்கம் திமுக இல்லை. மத்தியில் ஒரு ஆட்சி நடக்கிறது, அதை அடையாளம் காட்ட பாஜக ஆட்சி என்கிறோம். அது பாஜக ஆட்சி அல்ல. உண்மையில் ஜனங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய ஆட்சியாக இருக்கிறது.

மிருக பலம்

மிருக பலம்

2014-ஆம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையில் பாஜக உதயமானது. உதயமான பாஜக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி பொறுப்பில் இருந்து அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்றது. மிக பெரும்பான்மையான வகையில் மிருக பலத்துடன் வெற்றி பெற்றது.

மொழிகள்

மொழிகள்

இந்தியாவில் பல இனங்கள், மொழிகள், பல்வேறு மத நம்பிக்கைக் கொண்டவர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பல 100 ஆண்டுகளாக வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். அந்த ஒற்றுமையில் விஷம் கலக்கின்றது பாஜக அரசு.

குடிமக்களின் உரிமைகள்

குடிமக்களின் உரிமைகள்

குடியுரிமை சட்டத்தை தான்தோன்றித்தனமாக அவசர அவசரமாக, சர்வாதிகார போக்கில் நிறைவேற்றியுள்ளார்கள். இஸ்லாமியர்களை நசுக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது. குடியுரிமை என்றால் என்ன, குடிமக்களின் உரிமைகளை பறிப்பதுதான் குடியுரிமை என வினவியுள்ளார்.

English summary
DMK President MK Stalin says in Protest against Citizenship Amendment act that
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X