Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிஞ்சு போன செருப்பு.. டக்கென வார்த்தையை விட்ட அண்ணாமலை.. வலுக்கும் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: பிஞ்சு போன செருப்பு என இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதாக அண்ணாமலைக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர், வேணுகோபாலை ஆதரித்து நேற்று பிரச்சாரம் செய்தார் அண்ணாமலை. அப்போது பேசிய அவர், மத்தியில், மீண்டும் நமது நரேந்திர மோடி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி என்றார்.

Opposition condemns that Annamalai compared hindi imposition protest with teared slipper

தொடர்ந்து அண்ணாமலை பேசுகையில், "பாஜக ஆட்சிக்கு வரும்போது நாட்டின் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்தது.இப்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 33 மாதங்களில் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த கடன் ரூ.8.53 லட்சம் கோடி. நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழகம் தான். மோடி அரசு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வலிமையான, வளமான பாரதத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயிருக்கிறது.

பிரதமர் மோடி சமூகநீதியின் இலக்கணமாகத் திகழ்கிறார். 76 பேர் கொண்ட மத்திய அமைச்சரவையில் 11 பேர் பெண்கள், 12 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், 27 பேர் பிற்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். திமுக அமைச்சரவையின் 35 அமைச்சர்களில் 2 பேர் பெண்கள். அதிலும் ஒருவர் அரசியல் கோட்டாவில் வந்தவர். 2 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். திமுக அமைச்சர்கள் சமூக நீதியைப் பற்றிப் பேசினால் இந்த விவரத்தைச் சொல்லுங்கள். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தபெண் ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கியது பாஜக அரசுதான்.

தமிழ்நாட்டுக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். 45 லட்சம் விவசாயிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு ரூ.400 மானியம் தரப்படுவதால் 40 லட்சம் பேர் பயனடைகின்றனர். பயனாளியின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாகப் பணம் செலுத்திவிடுவதால் இவர்களால் கமிஷன் அடிக்க முடியவில்லை. அதனால்தான் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகின்றனர்.

திமுக தற்போது நடப்பது கவுன்சிலர் தேர்தல் என்பது போல் பிரச்சாரம் செய்கிறது. அதிமுக மாநில சட்டசபை தேர்தல் போல் பிரச்சாரம் செய்கிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என இரு கட்சிகளும் பிரச்சாரம் செய்யவில்லை. திமுக கடந்த முறை வெற்றி பெற்றதால் ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு மனைவியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 350% சொத்து உயர்ந்துள்ளது. திமுக வென்றால் திமுகவினரின் சொத்து மதிப்பு தான் உயருமே தவிர மக்களின் வாழ்வாதாரம் உயராது" எனப் பேசினார் அண்ணாமலை.

மேலும் பேசிய அண்ணாமலை, "1980ல் பேசிய அதே விஷயத்தை சம்பந்தமே இல்லாமல் இன்றைக்கும் பேசுகிறார்கள். இந்தி, சமஸ்கிருதம், வடக்கு தெற்கு என பேசிக் கொண்டிருக்கிறது திமுக. இன்னும் அந்த பிஞ்சு போன செருப்பை அவர்கள் தூக்கி எறியவில்லை." எனக் கூறினார் அண்ணாமலை.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரை ஈந்த நிலையில், இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்சு போன செருப்பு எனக் குறிப்பிட்டு அண்ணாமலை பேசியுள்ளதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. அண்ணாமலை தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் குரல்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக பேசியுள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், "பிரதமர் மோடி தன்னால் தமிழ் பேச முடியவில்லையே என வருத்தப்படுவதாக இங்கு வரும்போது சொல்கிறார். ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ் மொழிக்காக நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பிஞ்ச செருப்பு என்கிறார்.

திட்டமிட்ட நாடகத்தை நடத்துகின்றனர். பிரதமர் மோடி இங்கு வரும்போதும், வெளிநாடுகளிலும் தமிழ் பற்றி உயர்வாகப் பேசுகிறார். ஆனால், இங்கேயே இருக்கும் அண்ணாமலை கேவலமாகப் பேசுகிறார். சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறு, பாஜகவினர் மாறிக் கொள்வார்கள்.

நாங்கள் சிலவற்றை தூக்கிப் போட்டதால் தான் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. தமிழ்நாடு கொடுக்கும் வரியால் இந்தியை தூக்கி சுமக்கும் உத்தர பிரதேசத்திற்கு அதிக நிதி வழங்கப்படுகிறது. தமிழ்நாடு உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாக இருப்பதற்கு காரணம் இந்தியை அன்றைக்கு ஒதுக்கி வைத்ததால் தான்" எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+