காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வயிற்றில் ஒரு குழந்தை.. கையில் ஒன்று.. சாலையை கடக்க முயன்ற கர்ப்பிணி.. மூவரும் பரிதாப பலி!

கார் மோதி கர்ப்பிணி பெண், 4 வயது மகன் பலியானார்கள்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: வயிற்றில் ஒரு குழந்தை.. கையில் ஒரு குழந்தை.. சாலையை கடக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி மீது கார் மோதிவிட்டது.. மொத்தமாக 3 பேருமே உயிரிழந்துவிட்டனர்!

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதி புதிய கல்பாக்கம்.. இங்குள்ள மீனவர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி.. இவர் ஒரு மீனவர். மனைவி பெயர் திலகவதி.. 4 வயதில் திருமுருகன் என்ற மகன் இவர்களுக்கு இருக்கிறான். கோவளத்தில் ஒரு தனியார் பள்ளியில் திருமுருகன் யுகேஜி படிக்கிறான்.

pregnant lady, and son died in road accident near chengalpat

35 வயதாகும் திலகவதி இப்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார்.. நிறைமாத கர்ப்பிணி.. இந்நிலையில், மகனை ஸ்கூலில் விடுவதற்காக ஈசிஆர் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்புக்கு திலகவதி நடந்துவந்து கொண்டிருந்தார். அம்மாவின் கையை பிடித்தபடி திருமுருகனும் வந்தான்

அப்போது ஈசிஆர் ரோட்டில் உள்ள தடுப்புச்சுவர் வளைவு பகுதியை, திலகவதியும், திருமுருகனும் கடக்க முயன்றனர்... அந்த சமயத்தில் மாமல்லபுரம் நோக்கி ஒரு கார் வேகமாக வந்து, இவர்கள் மீது மோதியது.... பலமாக கார் மோதியதால், தாயும், மகனும் தூக்கி வீசிப்பட்டனர்.. அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே இருவருமே துடிதுடித்து இறந்தனர். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றினர்.

pregnant lady, and son died in road accident near chengalpat

நிறைமாத கர்ப்பிணி மனைவியும், மகனும் விபத்தில் உயிரிழந்த நேரம் சத்தியமூர்த்தி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தார்... அவருக்கு வாக்கிடாக்கி மூலம் உறவினர்கள் நடந்த துயரம் குறித்து தகவல் சொன்னார்கள்.. உடனடியாக கடலில் இருந்து கரைக்கு திரும்பிய சத்தியமூர்த்தி உருக்குலைந்து கிடந்த மனைவி, மகனை பார்த்து கதறி அழுதது அனைவரையும் உலுக்கிவிட்டது!

English summary
pregnant lady, and her 4 year old son died in car accident near chengalpat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X