காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்திவரதர் கோவிலில் குவிந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர்.. வழிபாடு நடத்திய மோகன் பகவத்.. சிறப்பு பூஜை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Athi Varadar Darshan : அரை மணி நேரத்தில் அத்தி வரதரை தரிசனம் செய்த மக்கள் - வீடியோ

    காஞ்சிபுரம்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் இன்று காலை வழிபாடு நடத்தினார்.

    தமிழகத்தில் தற்போது ஹாட் டாப்பிக் என்றால் அது காஞ்சிபுரம் அத்திவரதர்தான். காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் தற்போது இந்தியா முழுக்க பிரபலம். தமிழகத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இங்கு குவிந்து வருகிறார்கள்.

    அதேபோல் பல மாநிலங்களில் இருந்து இவரை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் கூட்டமாக காஞ்சிபுரத்தை நோக்கி படை எடுத்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் கொண்டு சென்று விடுவார்கள். அதன்பின் 40 ஆண்டுகளுக்கு தரிசனம் செய்ய முடியாது என்பதால் இப்போதே எல்லா பக்தர்களும் அவரை தேடி தேடி தரிசித்து வருகிறார்கள்.

    யார்

    யார்

    இங்கு சாதாரண மக்கள் எந்த அளவிற்கு வருகிறார்களோ அதே அளவிற்கு விஐபி பக்தர்களும் வருகிறார்கள். பல தொழில் அதிபர்கள், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் இங்கே குவிந்து வருகிறார்கள்.

    முதல்வர்

    முதல்வர்

    அதன் ஒரு பகுதியாக நேற்றுதான் இங்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் இன்று அத்திவரதர் கோவிலில் தரிசனம் செய்ய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வந்தார். இவருடன் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பலர் கோவிலுக்கு வந்தனர். கோவிலில் நீண்ட நேரம் வழிபாடு செய்த அவர் சிறப்பு பூஜையும் செய்தார்.

    அதிகம்

    அதிகம்

    தமிழக பாஜக உறுப்பினர்கள் பலரும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உடன் கோவிலுக்கு வந்து இருந்தனர். ஏற்கனவே பாஜக தலைவர்கள் மத்தியில் அத்திவரதர் கோவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையால் இந்த கோவில் இன்னும் அவர்களிடத்தில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

    என்ன சிறப்பு

    என்ன சிறப்பு

    இதனால் கூடுதலாக பாஜக தலைவர்கள் இனி வரும் நாட்களில் அத்திவரதர் கோவிலுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் ஆகஸ்ட் 4ம் தேதிவரை ஆடிப்பூரம் உற்சவம் இந்த கோவிலில் நடைபெற இருக்கிறது. இதனால் பக்தர்கள் எண்ணிக்கை போக போக அதிகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    English summary
    RSS chief Mogan Bhagwat did a special Pooja in Athi Vardar temple today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X