காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொறுப்பை என்கிட்ட கொடுங்கள்.. நாளைக்கு பாருங்க பெட்ரோல் விலை 40 ரூபாய் ஆயிடும்.. டி.ஆர். பாலு சவால்

Google Oneindia Tamil News

ஸ்ரீபெரும்புதூர்: என்னிடம் பொறுப்பை கொடுங்கள். இப்போ 74 ரூபாயாக விற்கும் பெட்ரோல் விலை நாளைக்கு 40 ரூபாய்க்கு கொண்டு வந்துவிடுவேன் என ஸ்ரீபெரும்புதூர் எம்பி தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு சவால் விடுத்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக டி.ஆர். பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்றைய தினம் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் குரோம்பேட்டையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகியன கலந்து கொண்டன.

தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் மேலும் குறைந்தது.. காலியிடங்கள் 22 ஆக உயர்ந்தது! தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் மேலும் குறைந்தது.. காலியிடங்கள் 22 ஆக உயர்ந்தது!

நியாயம்

நியாயம்

கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர். பாலு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.75-க்கு விற்கப்படுகிறது. இது நல்ல மற்றும் நியாயமான விலையே கிடையாது.

அனுபவத்தில்

அனுபவத்தில்

கடந்த 1996-ஆம் ஆண்டு பெட்ரோலியத் துறை அமைச்சராக நான் பணியாற்றியுள்ளேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். என்னிடம் பொறுப்பை கொடுங்கள்.

[39 தொகுதிகளும் நுனி விரலில்.. ஒன்இந்தியா தமிழில்]

சவால்

சவால்

நாளை காலைக்குள் 40 ரூபாயாக பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன். மோடி எங்கேயோ சென்று சவால் விடுகிறார். நான் இங்கு சவால் விடுகிறேன்.

பாலு கேள்வி

பாலு கேள்வி

பெட்ரோல் விலையை 40 ரூபாய்க்கு கொண்டு வருகிறேன். அப்படி செய்துவிட்டால் பாஜகவினர் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது. இதை அவர்கள் சவாலாக ஏற்பார்களா என டி.ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
EX Minister T.R.Balu says that if he has taken the post, then he will reduce the petrol price to Rs. 40.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X