இதுதான் தமிழகம்! காஞ்சி சங்கர மடம் எதிரே பெரியார் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அர்ச்சகர்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடம் எதிரே பெரியார் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் அர்சசகர்களும் பங்கேற்றது பலருக்கும் வியப்பை தந்தது.
தமிழர்களின் வாழ்வில் அறிவுக் கண்ணைத் திறந்த பகுத்தறிவுப் பகவலவன் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் விழா இன்று உலகம் முழுவதும் தமிழர்களால் பேரெழுச்சியுடன் கொண்டாப்பட்டு வருகிறது.

பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி காஞ்சிபுரம் சங்கரமடம் எதிரே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு இன்று அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது பெரியாருக்கு ஆதரவாகவும், நீட் தேர்வை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். அப்போது சாலையில் சென்ற கோவில் அர்ச்சகர் பெரியார் ஆதரவாளர்கள் வழங்கிய துண்டு பிரசுரங்களை பெற்றுக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவர்களுடன் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள்.. சுயமரியாதையை தன்மான உணர்வை தட்டி எழுப்பிய பெருஞ்சூரியன்!
காஞ்சிபுரம் சங்கரமடம் எதிரே நடந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் கோவில் அர்ச்சகர் கலந்து கொண்டது அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியது.