காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேகமாக நிரம்பும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தென்னேரி.. 30 கிராமங்களுக்கு அலார்ட்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தென்னேரி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. .

Recommended Video

    காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான தென்னேரி ஏரி வேகமாக நிரம்பி வருகிறது - வீடியோ

    உபரி நீர் வெளியேறுவதால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றானது தென்னேரி ஏரி.இந்த ஏரி நீரை பயன்படுத்தி 5,588 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் பாசன வசதி அடைகிறது. தென்னேரி மஞ்சம்மேடு, விளாகம், தென்னேரி அகரம், அயிமிச்சேரி, வாரணவாசி, தொள்ளாழி,தேவரியம்பாக்கம், திருவங்கரனை உள்ளிட்ட கிராம விவசாயத்திற்கு தென்னேரி ஏரி நீர் பயன்படுகிறது.

    Tenneri Lake, the largest lake in the Kanchipuram district, is rapidly filling up

    தற்போது நிவர் புயல் கன மழை தொடர்ச்சியாக பெய்து வரும் காரணத்தினால் தென்னேரி தனது முழு கொள்ளளவான 18 அடியை வேகமாக எட்டி வரும் நிலையில் உள்ளது.

    இதன் காரணமாக மேட்டுகாலனி பகுதியில் உள்ள தென்னேரி ஏரியின் கலங்களில் உபரிநீர் வெளியேறி வருகிறது.

    இதன் காரணமாக வாலாஜாபாத்-சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் தென்னேரி ஏரி கிராமம் அருகே உள்ள மஞ்சமேடு பகுதி தரைப்பாலம் மூழ்கி மழை வெள்ளநீர் இரண்டு அடிக்கு மேல் செல்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    Tenneri Lake, the largest lake in the Kanchipuram district, is rapidly filling up

    வாலாஜாபாத் சுங்குவார்சத்திரம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் 15-த்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடுதலாக 15 கிலோமீட்டர் தூரம் தூரம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஏரியிலிருந்து மழை வெள்ள உபரி நீர் வெளியேறி வருவதால் தென்னேரி ஏரியை ஒட்டிகரையோரம் உள்ள அகரம்,வாரணவாசி,கட்டவாக்கம், அவளூர், தேவரியம்பாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அடுத்த புயல்.. அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் நோக்கித்தான்!அடுத்த புயல்.. அடுத்த 48 மணிநேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகம் நோக்கித்தான்!

    தென்னேரி கலங்கல் நீரால் மஞ்சமேடு தரைப்பாலம் மூழ்கியுள்ளதால் பொது மக்கள் பயன்பாட்டிற்கும்,போக்குவரத்து பயன்பாட்டிற்கும் ஏதுவாக தரைப்பாலத்தை உயர்த்தி கட்டிட வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Tenneri Lake, the largest lake in the Kanchipuram district, is rapidly filling up. Extreme levels of flood danger were announced in at least 30 villages
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X