காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா லாக் டவுன் தளர்வு - காஞ்சிபுரத்தில் மெல்ல திரும்பும் இயல்பு வாழ்க்கை

காஞ்சிபுரத்தில் முழு லாக்டவுன் உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. டீக்கடைகள், ஹோட்டல்கள், கா

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழுஊரடங்கு உத்தரவுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்டம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. டீக்கடைகள் கடைகள் உணவகங்கள் மளிகை கடைகள் காய்கறி மற்றும் கறிகடைகள் யாவும் திறக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்கள் ஓடத் துவங்கி உள்ளன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொருபுறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து விடுமோ என்று அச்சமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் அமலில் உள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு நேற்று வரை கடைபிடிக்கப்பட்டது.

Unlock 2.0: Kanchipuram return in Normal

குன்றத்தூர், மாங்காடு குன்றத்தூர் ஊராட்சியை சேர்ந்த 18 கிராமங்களில் முழு ஊரடங்கு உத்தரவும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிற பகுதிகளான ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்தரமேரூர் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் சிகிச்சை முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அனைத்து பகுதிகளிலும் தேனீர் கடைகள் உணவகங்கள் மளிகை கடைகள் காய்கறி மற்றும் கறிகடைகள் யாவும் திறக்கப்பட்டு உள்ளது.

Unlock 2.0: Kanchipuram return in Normal

மாவட்டம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் ஆட்டோக்கள் ஓடத் துவங்கி உள்ளன. மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Unlock 2.0: Kanchipuram return in Normal

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2547 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று காரணமாக 1531 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 983பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழப்பு 33ஆக உள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

Unlock 2.0: Kanchipuram return in Normal

தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னொருபுறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து விடுமோ என்று அச்சமடைந்துள்ளனர். அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றினால் மட்டுமே நோய் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Tamil Nadu government on Monday relaxed the COVID-19 complete lockdown in Kanchipuram district. Kanchipuram to return in Normal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X