காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டசபை தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியா?.. சும்மாவே ஆடுவார்.. இதில் சலங்கை வேறயா?

Google Oneindia Tamil News

உத்தரமேரூர்: விஜயபிரபாகரன் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது கூட்டணி, தொகுதி பங்கீடுகளுக்கு பிறகே தெரியவரும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உத்திரமேரூரில் தெரிவித்தார்.

Recommended Video

    சட்டசபை தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறாரா?.. பிரேமலதா பரபரப்பு விளக்கம் - வீடியோ

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் நடைபெற்ற தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: பெண்கள் முடிவெடுத்தால் தமிழகத்தில் நிச்சியம் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

    ஜனநாயக முறையில் குடவோலை முறைக்கு பெயர் பெற்றது உத்தரமேரூர். இந்த பகுதியில் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நிமிடம் வரை தேர்தலில் பேட்டியிட நினைத்தது கூட இல்லை.

    இன்னொரு நாள்

    இன்னொரு நாள்

    ஒரு நாள் இல்லை ஒருநாள் மக்கள் மற்றும் கடவுள் ஆசியுடன் தேமுதிக ஆட்சியமைக்கும். தேர்தல் பிரச்சாரத்திற்கு இறுதி கட்ட பரப்பரைக்கு நிச்சயம் விஜயகாந்த் வருவார். தேமுதிக ஆட்சி என்றால் விஜயகாந்த் தான் முதல்வர். கூட்டணியை செயற்குழு பொதுக் குழு கூட்டி விஜயகாந்த் அறிவிப்பார்.

    யார் பலம்

    யார் பலம்

    பெட்ரோல் டீசல் விலை உயர்வதால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்கிறது மத்திய மாநில அரசுகளிடம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த நிச்சயம் வலியுறுத்துவோம். தேர்தல் முடிவு வந்தால் தான் யார் பலம்? யார் பலவீனம்? என்பது தெரியவரும். மக்கள் நிச்சயமாக நல்ல முடிவு எடுப்பார்கள்.

    அதிகாரப்பூர்வ செய்தி

    அதிகாரப்பூர்வ செய்தி

    கட்சியின் ஆலோசனைக் கூட்டத்திலும் எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொள்ளும் தகவல்களை செய்திகளாக வெளியிடுவது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் தகவலை மட்டும் செய்தியாக பெருகிட வேண்டும்.

    தெளிவான முடிவு

    தெளிவான முடிவு

    தேர்தல் தேதி அறிவித்த பிறகு எத்தனை தொகுதி யார் வேட்பாளர் என்பதெல்லாம் தெரிந்த பிறகுதான்
    விஜய பிரபாகரன் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா என்பது தெரியவரும். தமிழகத்தில் நடைபெற்ற எத்தனையோ தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு உள்ளது. எனவே களத்திற்கு வரும்பொழுது தெளிவான ஒரு முடிவோடு வரவேண்டுமென காத்திருக்கிறோம் என்றார்.

    சலங்கை

    சலங்கை

    விஜயபிரபாகரன் அண்மைக்காலமாக மூத்த அரசியல்வாதிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை. அதிமுகவை விமர்சிப்பது, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக விஜயகாந்தை கட்சி தலைவர்கள் பார்க்க சென்ற போது "எதுக்குடா என் வீட்டு முன்னாடி வர்றீங்க" என ஒரு பேட்டி கொடுத்தது... இப்படி சும்மாவே கைத்தட்டல்களுக்காக ஆடும் விஜய பிரபாகரனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தால் சொல்ல வேண்டுமா என்ன?

    English summary
    Premalatha says about whether Vijaya Prabhakaran contest in this election or not?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X