காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை மற்றும் பல மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

Water Scarcity: Devotees Worship In kanchipuram Thandu Mariamman Temple

இதையடுத்து தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.

சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச் சக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்

இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபேர்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.

கடந்த மூன்று நாட்களாக வைகாசி மாத திருவிழா நடைபெற்று வரும் நிலையில்,மழை வேண்டி கோயில் வளாகத்தில் இன்று அங்கப்பிரதட்சணம் நடத்தப்பட்டது. சில பக்தர்கள் அலகு குத்தியும், சாடல் குத்திக்கொண்டு ராட்டினத்தில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவினை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

English summary
Devotees Worship in Thandu Mariamman Temple Near Kanchipuram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X