காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தரமேரூர் கோயிலில் பூமியில் கிடைத்த நகைகளை அரசிடம் ஒப்படைக்க கிராம மக்கள் மறுப்பது ஏன்?

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ள ஒரு கோயிலில் புனரமைப்பு பணியின் போது பூமிக்கடியில் கிடைத்த தங்க ஆபரணங்களை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க கிராம மக்கள் ஏன் மறுக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்கள்.

Recommended Video

    உத்தரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் தங்க குவியல்.. வருவாய் துறையிடம் ஒப்படைக்க மறுக்கும் கிராமம்!

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் 16ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோயில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் உள்ள இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த, கோவில் விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    இந்நிலையில் கோவில் கருவறையின் நுழைவுவாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை திருப்பணிக் குழுவினர் அகற்றினர். அப்போது அதன் கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய அளவிலான மூட்டை இருந்தது.

    வருவாய்த் துறை

    வருவாய்த் துறை

    அதை பிரித்து பார்த்தபோது ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்தன. மேலும் வருவாய்த்துறை அனுமதி இல்லாமல் 500 ஆண்டு கால பழமையான கோவிலை முழுவதுமாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். அப்போது கோவிலில் படிக்கட்டை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பெயர்க்கும் பொழுது குவியல் குவியலாக தங்கம் கிடைத்ததாக வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தீர்மானம்

    தீர்மானம்

    இதனைத்தொடர்ந்து கிடைக்கப் பெற்ற தங்கத்தை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்வதற்காக கோவில் அமைந்துள்ள பகுதிக்கு செல்லும் பொழுது அப்பகுதி மக்களுக்கும் வருவாய் துறைக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வட்டாட்சியர் ஏகாம்பர் நகைகளை அரசிடம் ஒப்படைத்துவிடும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் மக்களோ முடியாது என தீர்மானமாக சொல்லிவிட்டனர்.

    தீர்மானம் நிறைவேற்றம்

    தீர்மானம் நிறைவேற்றம்

    பின்னர் கோட்டாட்சியர் வித்யா வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் தங்க நகைகளை வருவாய் துறையினரிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்றார். அது கிராம மக்களோ கோயிலில் கிடைத்த நகைகளை அரசிடம் ஒப்படைக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

    நகைகள்

    நகைகள்

    மேலும் இது இந்து அறநிலையத் துறையின் கீழ் இந்த கோயில் வரவில்லை. இந்த நகைகளை நாங்கள் கொடுக்க மாட்டோம் என்றார்கள். இந்த நகைகளை ஏன் மக்கள் கொடுக்க மறுக்கிறார்கள் என்பதற்கான காரணத்தையும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

    கருங்கற்கள்

    கருங்கற்கள்

    அதாவது இந்த கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. வெறும் கருங்கற்களால் கட்டப்பட்டது. இந்த கோயிலில் உள்ள சுவாமிகளுக்கு அணிவித்து விட்டு கழற்றி வைக்கும் வகையில் தற்போது கிடைத்துள்ள நகைகள் உள்ளன. இது நாயக்கர் காலத்தை சேர்ந்த நகைகளாகும். தெய்வங்களுக்கு அணிவிக்கும் நகைகளை ஏன் படிக்கட்டுகளுக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார்கள் தெரியுமா.

    நகைகளை பாதுகாக்க...

    நகைகளை பாதுகாக்க...

    17 ஆம் நூற்றாண்டுகளில் கோயில்களில்தான் மன்னர்கள் விலையுயர்ந்த நகைகளை வைத்திருப்பார்கள் என தெரிந்தே கோயில்களுக்கு வந்து அன்னியர்கள் கொள்ளையடிப்பார்கள். அவர்களிடம் இருந்து நகைகளை காக்கவே இது போல் பூமிக்கடியில் புதைத்து வைப்பது வழக்கம். அது போல்தான் இந்த நகைகளும் கொள்ளைக்கு பயந்து புதைத்து வைக்கப்பட்டன. எனவே தற்போது கண்டெடுக்கப்பட்ட நகைகள் அனைத்தும் கும்பாபிஷேகத்தின் போது சுவாமி சிலைகளுக்கு சாத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

    English summary
    Here are the reasons why the Village people refuses to handover the jewels to the Government?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X