• search
கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"பொண்ணுக்கு" வயசு 51.. மாப்பிள்ளைக்கு 26தான்.. பயங்கர லவ்.. கடைசியில் பார்த்தால்.. மிரண்டு போன குமரி

|

கன்னியாகுமரி: பொண்ணுக்கு வயசு 51, மாப்பிள்ளைக்கு வயசு 26.. உருகி உருகி காதலித்தனர்.. கல்யாணமும் செய்து கொண்டனர்.. கடைசியில் இந்த லவ் மேரேஜ் ஒரு கொலையில் வந்து முடிந்துள்ளது.

  கன்னியாகுமரி: 51 வயது பெண், 26 வயது இளைஞன்… அலறும் குமரி.. கல்யாணம் முடிந்து வெளியான டுவிஸ்ட்..!

  கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ளது காரகோணம் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்த பெண் சகா.. கொஞ்சம் வசதியானவர்.. 10 ஏக்கருக்கு விவசாய நிலம் இருக்கிறது.. சொந்தமாக பியூட்டி பார்லர் வைத்துள்ளார். அதிலும் நல்ல வருமானம் வருகிறது.

  சின்ன வயசில் இருந்தே ரொம்பவும் வசதியாக வாழ்ந்தவர் சகா.. இவருடைய அம்மா, நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாதவர்.. தானும் கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டால், அம்மாவை பார்த்து கொள்ள யாருமே இல்லையே என்று சகா கவலைப்பட்டார்.அதற்காக வீட்டோடு மாப்பிள்ளையை தேடி வந்தார்.. அத்துடன் வசதியான மாப்பிள்ளையாகவும் தேடி வந்தார்..

  ரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை

   சகா - அருண்

  சகா - அருண்

  ஆனால், வயசு ஏறி கொண்டு போனதுதான் மிச்சம்.. இப்படியே காத்திருந்து காத்திருந்து சகாவுக்கு 51 வயசாகி விட்டது. இந்நிலையில்தான் அருண் என்ற இளைஞர் சகாவுக்கு அறிமுகமானார்.. அருணுக்கு 26 வயசாகிறது.. கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்தவர்.. அதே ஊரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கிறார்.. இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.. ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பித்தனர்.. ஒருகட்டத்தில் கல்யாணம் செய்யவும் முடிவெடுத்தனர்.. அதன்படி 2 மாசத்தக்கு முன்பு சர்ச்சில் சகாவும், அருணும் கல்யாணம் செய்து கொண்டனர்.

   கண்ணீர்

  கண்ணீர்

  இந்நிலையில்,ஒருநாள், கரண்ட் ஷாக் அடித்து சகா இறந்துவிட்டதாக திடீரென கதறி அழுதார் அருண்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக போலீசாரக்கு தகவல் சொன்னார்கள்.. போலீசாரும் விரைந்து வந்து சகாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை ஆரம்பித்தனர்.. அப்போது, தம்பதி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என்று அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.

   கல்யாணம்

  கல்யாணம்

  இதையடுத்து, கிடுக்கிப்பிடி விசாரணை அருணிடம் ஆரம்பமானது.. அப்போதுதான் விஷயமே வெளியே வந்தது.. அதாவது, சகாவுக்கு 51 வயசு என்று அருணுக்கு இதுவரை தெரியாதாம்.. லவ் பண்ணும்போதெல்லாம் ஓவர் மேக்கப் போட்டுகொண்டு, காஸ்ட்லி டிரஸ் அணிந்தபடியே சகா இருந்ததால், வயது அவ்வளவாக தெரிய காணோம்.. தன்னை விட, ஓரளவுதான் வயதில் பெரியவர் என்று நினைத்தாராம்.. ஆனால், 51 வயசு என்று கல்யாணம் முடிந்துதான் தெரியவந்ததாம்.

   மாப்பிள்ளை

  மாப்பிள்ளை

  அதுமட்டுமல்ல, சகா பெயரில் உள்ள 10 ஏக்கர் நிலமும், பியூட்டி பார்லரில் வரும் வருமானத்தையும் மனசில் வைத்து கொண்டுதான் அருண் கல்யாணத்துக்கு சம்மதித்துள்ளார்.. வீட்டோடு மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கவும் இன்னும் குஷியாகிவிட்டார். அருண் வீட்டில் இந்த காதலுக்கு ஒத்துக் கொள்ளவே இல்லை என்றாலும், சொத்துக்காக சகாவை கல்யாணம் செய்துள்ளார்.

   ஃபேஸ்புக்

  ஃபேஸ்புக்

  ஆனால், சகா தன் வயதான அம்மாவை கவனித்து கொண்டே இருந்தாராம்.. அருணை சரியாக கண்டுகொள்வதில்லையாம்.. இதுவும் தம்பதிக்குள் தகராறாக வெடித்து வந்துள்ளது.. இந்நிலையில், சகா தன்னுடைய கல்யாண போட்டோவை ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார்.. இதை பார்த்துவிட்ட அருணின் நண்பர்கள் அருணை கிண்டல் செய்துள்ளனர் போல தெரிகிறது.. இதுதான் அருணுக்கு இன்னும் ஆத்திரமாகிவிட்டது.. அதனால், சகாவை கொலை செய்துவிட்டு, எல்லா சொத்துக்களையும் தானே எடுத்து கொள்ள முடிவெடுத்தார்.

   மின்சாரம்

  மின்சாரம்

  அதன்படி, ஒருநாள் சகா வீட்டில் சாப்பாடு செய்து கொண்டிருந்தார்.. அப்போது எலக்ட்ரிக் அடுப்பில் தள்ளி கொல்ல முயன்றார்.. ஆனால், சகா நூலிழையில் தப்பிவீட்டார். அதன்பிறகு, சம்பவத்தன்று, சகாவை மின்சாரம் பாய்ச்சி கொன்றுள்ளார்.. மின்சார வயரை சகாவின் உடம்பில் சுற்றி அடித்து உதைத்து, ஷாக் கொடுத்து கொன்றுள்ளார்.. இறுதியில் கரண்ட் அடித்துவிட்டது என்று அக்கம்பக்கத்தினரிடம் ஒப்பாரி வைத்துள்ளார்.

  கைது

  கைது

  இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அருணை போலீசார் கைது செய்தனர். சகாவின் அம்மாவை பார்த்து கொள்ள யாருமே இல்லை என்பதால், அவரை காப்பகத்தில் கொண்டு போய் போலீசார் சேர்த்துவிட்டனர். இந்த கொலை சம்பவம் கேரள - தமிழக எல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

   
   
   
  English summary
  26 year old Husband killed 51 year old Wife near Kanniyakumari
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X