கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 40 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்.. ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கொரோனா தொற்று காரணமாக ஈரானில் சிக்கித் தவித்த 40 மீனவர்கள் நேற்று தமிழகத்திற்குத் திரும்பினர். இந்த தகவலை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஈரானில் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் பணியாற்றி வந்தனர். கொரோனா வைரஸால் லாக்டவுன்அறிவிக்கப்பட்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். ஈரானில் சிக்கி பல மாதங்களாக தவித்து வந்த நிலையில் அவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

40 Indian fishermen, who had been stranded in Iran due to the Covid-19, returned to Tamil Nadu

இந்நிலையில் ஈரானில் சிக்கித் தவித்த 40 இந்திய மீனவர்கள் (Fishermen) ஏர் இந்தியா விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், துத்துகுடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இந்த மீனவர்கள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

பல்ஸ் ஆக்ஸிமீட்டர்.. கொரோனா பாதித்தவர்களுக்கு எவ்வளவு முக்கியம்.. எப்படி அதை பயன்படுத்துவது? பல்ஸ் ஆக்ஸிமீட்டர்.. கொரோனா பாதித்தவர்களுக்கு எவ்வளவு முக்கியம்.. எப்படி அதை பயன்படுத்துவது?

முன்னதாக ஈரானில் சிக்கித் தவித்த மொத்தம் 681 இந்திய மீனவர்கள் ஜூலை 1 ம் தேதி அன்று இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் ஜலாஷ்வாவால் மூலம் பாதுகாப்பாக தமிழகத்திற்கு திரும்பி அழைத்து வரப்பபட்டனர் .

English summary
Forty Indian fishermen, who had been stranded in Iran due to the Covid-19, returned to Tamil Nadu yesterday. These fisherman from Kanyakumari, Nagapattinam, Thuthukudi, Ramanathapuram, Nagapattinam, Cudallore, Thirunelveli were handed over to respective district officials. They will be quarantined for 14 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X