• search
கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"ஆண்ட்டி" வெறியன்.. 51 வயசு மனைவி.. "அது" கிடைக்காததால் ஆத்திரம்.. வெலவெலத்த குமரி..!

|

கன்னியாகுமரி: 51 வயசு பெண்ணை கொலை செய்த 26 வயது கணவனை போலீசார் கைது செய்த நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

  கன்னியாகுமரி: 51 வயது பெண், 26 வயது இளைஞன்… அலறும் குமரி.. கல்யாணம் முடிந்து வெளியான டுவிஸ்ட்..!

  2 நாட்களாக ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ளது காரகோணம் என்ற பகுதி.. இங்கு வசித்து வந்த பெண் சகா..

  வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.. இவருக்கு அப்பா இல்லை.. ஆனால், வயதான அம்மா இருக்கிறார்.. அவரும் படுத்த படுக்கையாக இருக்கிறார். சகாவுக்கு 10 ஏக்கருக்கு விவசாய நிலம் இருக்கிறது.. சொந்தமாக பியூட்டி பார்லர் வைத்துள்ளார். அதிலும் தினம் தினம் நல்ல வருமானம் வருகிறது.

  "பொண்ணுக்கு" வயசு 51.. மாப்பிள்ளைக்கு 26தான்.. பயங்கர லவ்.. கடைசியில் பார்த்தால்.. மிரண்டு போன குமரி

  வயது

  வயது

  வயதான அம்மாவை கவனித்து கொள்ள யாரும் இல்லாததால், திருமணத்தை பற்றி யோசிக்காமலேயே இருந்துள்ளார் சகா.. வயதோ 51 ஆகிவிட்டது.. வீட்டோடு மாப்பிள்ளை யாராவது கிடைப்பார்களா என்று காத்திருந்த வேளையில்தான் அருண் வந்து சிக்கினார். அருணுக்கு 26 வயசாகிறது.. கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்தவர்.. ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கிறார்.

   பியூட்டி பார்லர்

  பியூட்டி பார்லர்

  அந்த ஆஸ்பத்திரிக்கு சகா அடிக்கடி சென்று வருவாராம்.. அப்போதுதான் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சகாவின் 10 ஏக்கர் சொத்து, பியூட்டி பார்லர் வருமானம், வீட்டோட மாப்பிள்ளை, போன்றவற்றை கணக்குபோட்டுதான் சகாவை கல்யாணம் செய்ய சம்மதித்துள்ளார். 2 மாதத்துக்கு முன்பு தன் குடும்பத்தையே எதிர்த்து சர்ச்சில் சகாவை கல்யாணம் செய்தார் சகா.

   சொத்து

  சொத்து

  ஆனால், 2 மாதத்துக்குள் இவர்களுக்குள் நிறைய சண்டை வந்துள்ளது.. இதல் முக்கிய காரணம், 51 வயது பெண்ணிடம் இருந்து அருணுக்கு எதிர்பார்த்த அளவு சந்தோஷம் கிடைக்கவில்லை என்பதாம்.. தாம்பத்தியத்தில் ஈடுபடாமல், தன் அம்மாவின் உடல்நலனையே பெரிதும் அக்கறை செலுத்தி வந்துள்ளார் சகா. இதுதான் முதல் காரணமாக வெடித்துள்ளது. அப்போதும் சொத்துக்காக பொறுத்து கொண்டு இருந்துள்ளார் அருண்.

  ஆத்திரம்

  ஆத்திரம்

  இதற்கு பிறகுதான், கல்யாண போட்டோவை ஃபேஸ்புக்கில் சகா பதிவிட்டுள்ளார்.. அதை அருணின் நண்பர்களுக்கும் டேக் செய்திருக்கிறார்கள்.. அதை பார்த்த அருணின் நண்பர்கள் கேலி செய்துள்ளனர்.. "ஆண்ட்டி வெறியன்", "பாட்டி வெறியன்" என்றெல்லாம் சொன்னர்களாம்.. இதில்தான் ஆத்திரம் அதிகமாகி கொலை வரை சென்றுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிக்காக வீட்டிலேயே குடில் வைத்திருக்கிறார்கள்.. அந்த குடிலுக்கு பயன்படுத்திய சீரியல் மின் விளக்கு ஒயரில் ஷார்ட் சர்க்கியூட் ஏற்படுத்தி வீட்டு வாசலில் வேண்டுமென்றே போட்டுள்ளார் அருண்.

   தகவல்கள்

  தகவல்கள்

  வீட்டில் இருந்து வெளியே சகா வரும்போது, அந்த ஒயரை மிதித்துள்ளார்.. அடுத்த செகண்டே கரண்ட் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளர் சகா.. உடனே உயிர் போகவில்லையாம்.. ஆனால், அவர் இறக்கும்வரை அங்கேயே காத்திருந்தாராம் அருண்.. சகாவின் மரணத்தை உறுதி செய்த பிறகே, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சென்று ஒப்பாரி வைத்துள்ளார். இவ்வளவு தகவல்களும் போலீசார் விசாரணையில் வெளிவந்துள்ளது.. தொடர்ந்து விசாரணையும் நடக்கிறது.

   
   
   
  English summary
  51 year old wife murder case in Kanniyakumari
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X