கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமரி கூலி தொழிலாளி மீது தாக்குதல்.. கேரளாவை சேர்ந்த சிபிஎம் உறுப்பினர்களுக்கு போலீஸ் வலை!

Google Oneindia Tamil News

Recommended Video

    குமரி கூலி தொழிலாளி மீது தாக்குதல்.. சி சி டிவி வீடியோ

    கன்னியாகுமரி அருகே கூலி தொழிலாளி மீது கேரளா மாநிலத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் தலைமையிலான கும்பல் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே கூலி தொழிலாளி மீது கேரளா மாநிலத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் தலைமையிலான கும்பல் தாக்குதல் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க போலீஸார் தேசிய வருகிறார்கள்.

     A Tamilnadu worker attacked by Kerala CPM members: Police on the search.

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தமிழக கேரளா எல்லை செங்கவிளையில் வசித்து வருகிறார் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜேக்கப் ( 28 ) என்ற ஒலி ஒளி அமைக்கும் தொழிலாளி. இவர் செங்கவிளையில் உள்ள ஒரு ஒலி ஒளி அமைக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    அதே பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒலி ஒளி அமைக்கும் போது செங்கவிளை மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் பைஜு என்பவருக்கும் ஜேக்கப் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதான் கைகலப்பில் முடிந்தது.

    அந்த திருவிழா முடிந்து ஜேக்கப் வேலை பார்க்கும் கடையில் ஒலிபெருக்கி உபகரணங்கள் இறக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பைஜு தலைமையில் ஒரு கும்பல் கடைக்குள் புகுந்து ஜேக்கப் மீது சரமாரியாக தாக்கியதோடு பைஜு மற்றும் அவரது தந்தை ராஜப்பன் ஆகியோர் சேர்ந்து கத்தியால் குத்தி உள்ளனர்.

    கத்தியால் குத்தியதில் ஜேக்கப் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் காரக்கோணம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இதுகுறித்து கேரளா பொழியூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

    தலைமறைவான பைஜு மற்றும் அவரது தந்தை ராஜப்பன் மற்றும் கும்பலை கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ ஆதாரங்களை வைத்து போலீஸ் தேடி வருகின்றனர்.

    English summary
    A Tamilnadu worker attacked by Kerala CPM members: Police on the search.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X