கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவை கடுமையாக விமர்சிக்கலாம்.. க்ரீன் சிக்னல் கொடுத்தது அதிமுக?

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜக நாராயணனை ஒருமையில் விமர்சித்த அதிமுக ஜவஹர் அலி

    சென்னை: பாஜகவை மிக கடுமையாக விமர்சிப்பதற்கு அதிமுக தலைமை க்ரீன் சிக்னல் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அதிமுக, பாஜக இரண்டும் கூட்டணி கட்சிகளாக அவ்வப்போது அறிவித்துக் கொள்கின்றன. ஆனால் பாஜகவை அதிமுக ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

    கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் அதிமுக அரசை மிக கடுமையாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விமர்சித்தார். தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது என குற்றம்சாட்டினார் பொன். ராதாகிருஷ்ணன்.

    நாங்கள் செய்யவில்லை.. தப்பிக்க பார்க்கும் ஈரான்.. அமெரிக்க தூதரகத்தை தாக்கியது யார்? தொடரும் மர்மம்நாங்கள் செய்யவில்லை.. தப்பிக்க பார்க்கும் ஈரான்.. அமெரிக்க தூதரகத்தை தாக்கியது யார்? தொடரும் மர்மம்

    பாஜக மீது அதிமுக கடும் விமர்சனம்

    பாஜக மீது அதிமுக கடும் விமர்சனம்

    இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மிகக் கடுமையாக பதிலடி கொடுத்தனர். ஆனாலும் பாஜக தரப்பு அதிமுகவை விமர்சித்து வந்தது. இது தொடர்பான டிவி விவாதம் ஒன்றில், பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணனுக்கும் அதிமுகவின் ஜவஹர் அலிக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பாஜகவின் நாராயணை தடித்த வார்த்தைகளால் ஒருமையில் விமர்சித்தார் ஜவஹர் அலி.

    நடவடிக்கை இல்லை

    நடவடிக்கை இல்லை

    இதில் பாஜக தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஜஹவர் அலி நீக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் ஜவஹர் அலி மீது அதிமுக நடவடிகை எடுக்க எதுவும் மேற்கொள்ளவும் இல்லை.

    ரஜினி விவகாரத்தில் அதிமுக

    ரஜினி விவகாரத்தில் அதிமுக

    மீண்டும் டிவி விவாதங்களில் ஜவஹர் அலி, அதிமுகவின் பிரதிநிதியாக பங்கேற்று வருகிறார். அவர் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்காததால் பாஜக தரப்பு கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தந்தை பெரியாரை ரஜினிகாந்த் அவதூறாக பேசிய விவகாரத்தில் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை துணிச்சலுடன் அதிமுக வெளிப்படுத்தியது.

    அதிமுக தலைமை ஓகே?

    அதிமுக தலைமை ஓகே?

    தற்போது பாஜக நிர்வாகியை ஒருமையில் பேசியபோதும் அதை மவுனமாகவே அதிமுக கடந்து செல்கிறது. பாஜக எதிர்ப்பு என்கிற அஸ்திரத்தை பயன்படுத்தி திமுக முழுமையாக ஆதாயம் அடைந்துவிடக் கூடாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது; அதனால்தான் வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் பாஜகவுக்கு ஆதரவான கட்சி அல்ல என்பதை வெளிப்படுத்திவருகிறது அதிமுக என்பதையே ஜவஹர் அலி விவகாரம் காட்டுகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    English summary
    Sources said that AIADMK gave green Singnal to its party seniors to criticise BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X