கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷா சென்று வணங்கிய 'சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்' - ஆச்சரியப்படுத்தும் ஆலய பின்னணி

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

Recommended Video

    #TNElection2021 கன்னியாகுமரி: கொளுத்தும் வெயில்…பொன்னாருக்காக வாக்கு சேகரிப்பு: வீடு, வீடாக போன அமித்ஷா!

    தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை என பரபரப்பாக சுழன்று வருகின்றன.

    Amit shah visits Suchindram Thanumalayan Temple

    இந்த நிலையில், தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று நாகர்கோவில் வந்தார். பிறகு, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார் .

    Amit shah visits Suchindram Thanumalayan Temple

    இதற்காக அந்த கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, இன்று 'வெற்றி கொடி ஏந்தி வெல்வோம்' என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைக்க இருக்கிறார். கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Amit shah visits Suchindram Thanumalayan Temple

    அமித் ஷா சென்ற தாணுமாலயன் கோயிலில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ளர். அதனால் தான் இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகிய முப்பெருங்கடவுள்களும் சேர்ந்துள்ளதாள் இத்தலம் மூர்த்தி தாணுமாலயன் என அழைக்கப்படுகிறார்.

    English summary
    Amit shah Suchindram Thanumalayan Temple
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X