கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினி கட்சி ஆரம்பிப்பார்.. 2021-ஆம் ஆண்டு திருப்புமுனையை ஏற்படுத்துவார்.. அர்ஜூன் சம்பத்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு ரஜினிகாந்த் அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவார் என இந்து மக்கள் முன்னணியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நடிகர் ரஜினிகாந்த் தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்படுவார் என்ற தகவலில் உண்மையில்லை.

Arjun Sampath says that Rajinikant will win in 2021 Assembly elections

அவர் விரைவில் கட்சியை தொடங்குவார். வரும் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துவார்.

தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட விலைமதிப்பற்ற சிலைகளை மீட்கும் முயற்சியில் பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிலைகளை மீட்கும் இந்த முயற்சிக்கு மத்திய மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஏன் கம்மென்று இருக்கிறார்!அமித்ஷா பற்ற வைத்த தீ.. வழக்கம் போல ரஜினி அமைதி.. ஏன் கம்மென்று இருக்கிறார்!

அய்யா வைகுண்டர் அனைவருக்கும் பொதுவானவர். இந்து மதத்தின் ஒரு அங்கமான அய்யா வழியை சிலர் தனி சமயமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைப்பது தவறானது. சபரிமலையின் புனிதம் காக்க இந்து மக்கள் கட்சி தொடர்ந்து போராடும் என்றார் அர்ஜூன் சம்பத்.

English summary
Hindu Makkal Party's president Arjun Sampath says that Rajinikant will win in 2021 Assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X