கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்… வைகோ உட்பட 403 பேர் மீது வழக்கு

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ போராட்டம்- வீடியோ

    குமரி: கன்னியாகுமரிக்கு வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உட்பட 403 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை - தூத்துக்குடி சந்திப்பான காவல்கிணறுவில் வைகோ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் 'Gobackmodi' என கருப்பு பலூன்களையும் வானில் பறக்கவிட்டனர்.

    Black flag against Modi; case against 403 peoples, including Vaiko

    இதனை அடுத்து, பாஜகவினர் சிலர் கூட்டத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    பின்னர், வைகோ உள்ளிட்ட மதிமுக தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். கல்வீச்சில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    <strong>Exclusive:</strong> பாஜகவுக்கு ஆதரவு இல்லை .. அதிமுகவுக்கு ஆதரவளிக்கலாம்.. மனம் திறந்த தனியரசு Exclusive: பாஜகவுக்கு ஆதரவு இல்லை .. அதிமுகவுக்கு ஆதரவளிக்கலாம்.. மனம் திறந்த தனியரசு

    போராட்டம் தொடர்பாக 50 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 403 பேர் மீது பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    English summary
    Black flag Protest against Modi: Police filed a case against 403 people including Vaiko
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X