கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சீரழிச்சிட்டான்".. புதிதாக பாய்ந்த புகார்.. இளம் பெண் கதறல்.. அடங்காத காசி.. 5 நாள் போலீஸ் காவல்!

நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு புகார் பதியப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: இளம்பெண் ஒருவர் காசி மீது மேலும் ஒரு புகார் தெரிவித்துள்ளார்.. இந்த புகாரை தொடர்ந்து நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது... அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

இதைதவிர, நில மோசடி வழக்கு, கந்துவட்டி புகார்களும் காசி மீது உள்ளன.. இதுவரை 17 வயது சிறுமி முதல் பல பெண்கள் காசி மீது புகார் தந்துள்ளனர்.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.. 2 முறை போலீஸ் காவலிலும் விசாரிக்கப்பட்டார்.

 உதவி

உதவி

இந்த விவகாரத்தில் காசிக்கு எல்லா உதவிகளையும் செய்த 19 வயது ஜினோ என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.. காசியின் லேப்டாப்பில் பெண் டாக்டர்கள், பெண் என்ஜினியர்கள், சிறுமிகள், அவர்களின் அம்மாக்கள், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள், தொழிலதிபர்களின் மகள்கள் என இவரால் ஏமாற்றப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.. காசிக்கு பல விஐபிக்கள் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

 வீடியோ

வீடியோ

அதற்கு காரணம், அந்த ஆபாச வீடியோவில் பல விஐபிக்களின் மனைவிகள் காசியுடன் நெருங்கி பழகி உள்ளது பதிவாகி இருந்தாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து காசி வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது... சிபிசிஐடி-க்கு மாறிய பிறகு பல தகவல்களை போலீசார் சேகரித்தனர்.. அவரது லேப்டாப்பில் இருந்த எல்லா ஆதாரங்களையும் அவர் அப்பாஅழித்துவிட்டதாக சொல்லி, அவரையும் கைது செய்த சம்பவமும் நடந்தது.

குற்றப்பத்திரிகை

குற்றப்பத்திரிகை

காசி மீது போடப்பட்டு இருந்த கந்துவட்டி வழக்கில் சிபிசிஐடி. போலீசார் குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். தற்போது மீதமுள்ள வழக்குகளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காசி மீது இன்னொரு பெண் புகார் சொல்லி உள்ளார்.. 2019 மற்றும் 2020 தொடக்கத்தில் சென்னையை சேர்ந்த இந்த பெண்ணை காசி, தனது வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகிறது. காசி கைதாவதற்கு முன்பு வரை அந்த இளம்பெண்ணுடன் தொடர்பில் தான் இருந்திருக்கிறார்.

 மேலும் ஒரு பெண்

மேலும் ஒரு பெண்

காலேஜ் படித்து முடித்த அந்த இளம்பெண், பயத்தின் காரணமாக இதுவரை புகாரளிக்க முன்வரவில்லை என்றும், அதனால்தான் புகார் தர காலதாமதமானது என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து காசி மீதான புகார் 6 ஆக உயர்ந்துள்ளது.. புகார் அளித்த பெண்ணுடன் காசிக்கு எவ்வாறு பழக்கம் ஏற்பட்டது? அவரிடம் இருந்து எவ்வளவு பணத்தை மிரட்டி பறித்தார்? என்ற விவரங்கள் சரிவர தெரியவில்லை. அதனால் காசியை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

இதற்காக நாகர்கோவிலில் உள்ள 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடந்தநிலையில, காசியை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.. வரும் 11ம் தேதி முதல் விசாரணை நடைபெற உள்ளதால், மேலும் பல தகவல்கள் இது சம்பந்தமாக வெளிவரும் என தெரிகிறது.

English summary
CBCID gets 5 days custody of Nagercoil Kasi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X