கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு?".. கன்னியாகுமரி வாக்கு சாவடியில் பரபரப்பு

கன்னியாகுமரியில் இறந்த பெண்ணின் ஓட்டை வேறு ஒருவர் செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Fake vote cast in Kanniyakumari: நெல்லை, குமரியில் அடுத்தடுத்து பதிவான கள்ள ஓட்டு!- வீடியோ

    கன்னியாகுமாி: "என் பொண்டாட்டி விஜியோட ஓட்டை போட்டது யாரு?" என்று கேட்டு கன்னியாகுமரி வாக்குச்சாவடி ஒன்றில் ஒரு பெரிய பரபரப்பே ஏற்பட்டுவிட்டது.

    தமிழகம் முழுக்க காலையில் இருந்து விறுவிறுப்பான வாக்கு பதிவு நடந்து முடிந்தது. இதில் சில இடங்களில் குழப்பங்களும், பிரச்சனைகளும் ஏற்பட்டன.

    அதுபோல கன்னியாகுமரியில் அழகியமண்டபம் பிலாவிளை 157-வது வாக்கு சாவடியிலும் ஒரு சமாச்சாரம் நடந்தது. கல்லுவிளையை சேர்ந்தவர் அஜின் என்பவர் ஓட்டு போடுவதற்காக பூத்துக்குள் சென்றாா்.

    2-வது முறையா?

    2-வது முறையா?

    கையில் கொண்டு வந்திருந்த பூத் ஸ்லிப்பை தோ்தல் அதிகாரியிடம் தந்தார். அதனை வாங்கி பார்த்த அதிகாரி, "அதான் ஏற்கனவே வந்து நீங்க ஓட்டு போட்டுட்டீங்களே, திரும்பவும் எதுக்கு ஓட்டு போட வந்திருக்கீங்க?" என்று கேட்டார்.

    மனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த்.. பூத்துக்ள் நுழைந்ததும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கெத்து! மனைவியுடன் ஓட்டு போட்ட விஜயகாந்த்.. பூத்துக்ள் நுழைந்ததும் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கெத்து!

    கைவிரல்

    கைவிரல்

    உடனே அஜின், "நான் இப்பதானே உள்ளே வர்றேன்.. என் கைவிரலை பாருங்க. மை இல்லை" என்று வாக்குவாதம் ஆரம்பமானது. பிறகுதான் தெரியவந்தது, அஜின் பெயரிலான வாக்கினை இன்று காலையிலேயே யாரோ ஒருவர் கள்ள ஓட்டு போட்டு பதிவு செய்திருக்கிறார் என்று!

    அரை மணி நேரம் ஆச்சு

    அரை மணி நேரம் ஆச்சு

    சிறிது நேரம் கழித்து அஜின், "என் மனைவி விஜி இங்க வந்து ஓட்டு போட்டாரா?" என்று கேட்டார். அங்கிருந்த அதிகாரிகள் அங்கிருந்த சீட்டை செக் பண்ணிவிட்டு, "ஆமாம்.. அவங்க ஓட்டு போட்டுட்டு போயி அரை மணிநேரம் ஆச்சு" என்றனர்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    "என்னது.. என் மனைவி வந்து ஓட்டு போட்டுட்டாளா? அவள் செத்து 7 வருஷம் ஆகுதே" என்றார். இதைக் கேட்டதும், அங்கிருந்த அதிகாரிகளுக்கு தூக்கி வாரிபோட்டது. இதையடுத்து திரும்பவும் வாக்குவாதம் அங்கு தொடர்ந்து கொண்டே இருந்தது.

    முகவர்கள்

    முகவர்கள்

    வாக்காளர் அட்டை இருந்தும் ஓட்டு போட முடியாததால் அஜின் மிகுந்த ஏமாற்றமடைந்தார். இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, "முகவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தினால், கள்ள ஓட்டு விழுந்ததை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது" என்றனர்.

    பூத் சிலிப்

    பூத் சிலிப்

    ஆதார் அட்டை இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் என இவ்வளவு இருந்தும் போலியாக வாக்காளர் அட்டை தயாரிப்பதும், ஒருவர் இன்னொருவர் பெயரில் கள்ள ஓட்டு போட்டு வருவதும் இந்த தேர்தலிலும் நடைபெற்றுள்ளது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.

    English summary
    In Kanniykumari vote casted name woman Viji died 7 years ago and registered first fake vote
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X