கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமரியின் பிரச்சனைகளை இப்படித்தான் தீர்ப்பேன்.. தீர்வுகளை அடுக்கும் வசந்த குமார்.. அசத்தல் பேட்டி!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்எல்ஏ எச். வசந்த குமார் தீர்வுகளை அடுக்கி உள்ளார்.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்எல்ஏ எச். வசந்த குமார். இவர் இப்போது நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் கன்னியாகுமரி பிரச்சனைகள் பலவற்றுக்கு சிறப்பான தீர்வுகளை வாக்குறுதிகளாக அளித்து உள்ளார்.

Exclusive interview of Congress Kanyakumari Candidate MLA Vasanta Kumar

வியாபார துறையில் வெற்றிகரமாக கொடி கட்டி பறக்கும் இவர் அரசியலிலும் அதே வெற்றிகரமான திட்டங்களை புகுத்தும் திட்டத்தில் இருக்கிறார். தனது பிஸ்னஸ் மூளையை மக்களுக்காக எப்படி பயன்படுத்துவேன் என்று விளக்கமாக பேட்டி அளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் எப்படி செல்கிறது?

அரசியல் தாண்டி மக்களுக்கு நல்ல ஒரு தலைவர் வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னைப்போல ஒரு மனிதரை மக்கள்தான் விரும்புகிறார்கள். நான் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்து மக்களுக்கு நிறைய செய்துள்ளேன். அதுதான் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்க காரணம். நான் லஞ்சம் வாங்க மாட்டேன், கமிஷன் வாங்க மாட்டேன். மக்களுக்கு நல்லது செய்வேன் என்று தெரியும்.

சொந்த காசில் குளத்தை எல்லாம் சுத்தம் செய்துள்ளீர்களாமே?

ஒரு குளம், சுத்தம் செய்ய பொதுப்பணித்துறையிடம் கேட்டேன். அவர்கள் 27 லட்சம் ரூபாய் ஆகும் என்றார்கள். என் கணக்குப்படி, ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு வாடகை ஆகும் என்று கேட்டேன். வாடகைக்கு எடுத்தால் கூட அவர்கள் சொன்ன காசில் 25%சதவிகிதம்தான் ஆகும். ஆனால் நான் சொந்தமாகவே வாங்கி ஜேசிபி வைத்து சுத்தம் செய்தேன். ரூபாய் 2 லட்சம்தான் செலவு ஆனது. இதை சட்டசபைக்கு கூட நான் கொண்டு சென்றேன்.

வளர்ச்சி என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள்?

நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும். நாம் நிறைய பாறைகளை உடைத்து அதானிக்காக கேரளாவிற்கு கொண்டு செல்கிறோம். இதனால் இயற்கை வளம் பாதிக்கும். சூடு அதிகரிக்கும். அழகான குமரியை பாதுகாக்க வேண்டும். அதை தற்போது கெடுக்கிறார்கள். அதேபோல் சிறுதொழில், தேங்காய், மீன் என்று குமரியில் கிடைக்கும் பொருளை வைத்து மக்களுக்கு பணம் கிடைக்க வழி செய்வேன். உடனே அவர்களுக்கு பணம் கிடைப்பதுதான் முக்கியம்.

கனிமவள கொள்ளை குறித்து என்ன நிலைப்பாடு?

கனிமவள கொள்ளை என்பது முதலில் மணலில் தொடங்கியது. கொள்ளைக்கு இப்போது கணக்கே இல்லை. அரசுக்கு 1500 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு 28000 ரூபாய்க்கு விற்கிறார்கள். மணலை எந்திரம் வைத்து எடுக்க கூடாது. மூன்று அடிதான் எடுக்க வேண்டும். அதை முதலில் தடுக்க வேண்டும்.

சரக்கு மாற்று முனையம் குறித்து உங்களின் நிலைப்பாடு?

குளச்சலில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. அதை விரிவுபடுத்தி ஒருங்கிணைந்த துறைமுகம் அமைக்க வேண்டும். அதன்மூலம் எல்லா பணிகளையும் ஒரே இடத்தில் செய்ய முடியும். அது இல்லாமல் புதிய திட்டம் கொண்டு வந்தால் அது வெற்றி அடைய வாய்ப்பே இல்லை. இயற்கையோடு நாம் ஒன்றிப் போக வேண்டும். இந்தியாவின் பாதம்தான் குமரி. நான் பாஜக திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கவில்லை.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு எப்படி உள்ளது?

தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் உள்ளது என்கிறார்கள். அவர்கள் நிறைய டோக்கன், பணம் எல்லாம் பிடிக்கிறார்கள். ஆனால் வெளியே தெரிந்ததும் அதை அப்படியே மறைக்கிறார்கள்.அது நியாயம் கிடையாது. அதை வெளியே சொல்ல வேண்டும். மக்களிடம் தெரிவிக்க வேண்டும். பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால் அதிகாரிகள் கொஞ்சம் பயன்படுகிறார்கள்.

Exclusive interview of Congress Kanyakumari Candidate MLA Vasanta Kumar

கன்னியகுமரிக்கு என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

இளைஞர்களுக்கு வேலைதான் முக்கியம், பிஇ படித்தவர்கள் சுத்தம் செய்யும் வேலைக்கு சேர்க்கிறார்கள். அதனால் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். தேர்தலுக்காக நான் பொய் சொல்லவில்லை. ஏழை இந்துக்களுக்கு கல்வி உதவித்தொகை தருவதாக பொன்.ராதாகிருஷ்னன் சொன்னார். ஆனால் கடந்த ஐந்து வருடத்தில் அவர் அதைச்செய்யவே இல்லை, என்று வசந்த குமார் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X