கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    TN local body elections first phase vote begins

    கன்னியாகுமரி: தமிழக உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக கன்னியாகுமரியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    உள்ளாட்சித் தேர்தலில் 4 வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தும் முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. வெவ்வேறு பதவிகளுக்கான 4 வாக்குச் சீட்டுகளில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டியுள்ளது.

    First Time EVM Machines use for Tamilnadu Local Body Elections

    இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் பொதுத்தேர்தல்களைப் போல மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் சோதனை முயற்சியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இன்றைய முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில்தான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் வரும் காலங்களில் உள்ளாட்சி தேர்தலிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களே பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.

    English summary
    Tamilnadu Election Commission First time used the EVM Machines for Local Body Elections in Kanyakumari.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X