கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வராத புயலுக்குத்தான் எத்தனை அமர்க்களம்.. கடைசியில் மீன் விலை ஏறிப் போனதுதான் மிச்சம்!

ஃபானி புயல் எதிரொலியால் மீன் விலை உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: வராத புயலுக்கு எவ்ளோ அமர்க்களம்.. கடைசியில் மீன் விலை ஜாஸ்தியானதுதான் மிச்சம்! இதனால மீன்கள் கிடைக்காமல், அப்படியே கிடைச்சாலும் விலை காரணமாக வாங்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர் குமரி மீன் பிரியர்கள்!

கிழக்கு கடற்கரை பகுதியில் இப்போது மீன்கள் இனப்பெருக்க காலம், அதனால் விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என தடை போடப்பட்டுள்ளது. இதனால் மீன் வரத்து குறைந்துவிட்டது.

Fish price increased in Nagarcoil due to Fani Cyclone Announcement

இதனால் கட்டுமரம், வள்ளம் போன்றவற்றை எடுத்து கடலுக்கு செல்லும் மீனவர்கள், என்ன மீன்கள் கிடைக்குமோ அதை கொண்டு வந்து விற்றார்கள். இந்த நிலையில்தான் ஃபானி புயல் வரப்போகிறது, அதனால் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க போக வேண்டாம் என்று எச்சரிக்கை வந்தது. அதனால் மீனவர்களும் 2 நாளாக கடலுக்கு போகவில்லை.

இதனால் மொத்தமாக மீன் வரத்து மேலும் குறைந்தேவிட்டது. காற்று, மழை, புயல் ஒரு பக்கம் இருந்தாலும் மீன் சாப்பிடாமல் சிலருக்கு இருக்க முடியாதே.. அதனால் மீன்களின் தேவையும் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. தேவை அதிகமானதால், விலையும் கூடிவிட்டது.

ஃபனி புயல் தாக்கம்.. தமிழகத்தையெல்லாம் தாண்டிச் சென்று பெங்களூரில் கொட்டித் தீர்த்த மழை ஃபனி புயல் தாக்கம்.. தமிழகத்தையெல்லாம் தாண்டிச் சென்று பெங்களூரில் கொட்டித் தீர்த்த மழை

குறிப்பாக நெய் மீன் ஒரு கிலோ ரூ.800 இருந்தது. இப்போது ரூ.1200 ஆகிவிட்டது. ரூ.400-க்கு விற்ற பாறை மீன் 700 ரூபாயாம். இதுகூட பரவாயில்லை.. ஒரு கூறு நெத்திலி மீன் வெறும் 20 ரூபாய்க்கு தந்தார்கள். இப்போ 50 ரூபாயாம்.

ஒரு பக்கம் மீன்பிடிக்க தடை.. இன்னொரு பக்கம் புயல் அறிவிப்பு.. இதனால் வரத்து குறைந்து, மீன் விலை அதிகமாகி.. கடைசியில நமக்கு மீன் சரியா கிடைக்காம போயிட்டு இருக்கு!

English summary
Fish Price increased in Kanniyakumari and Nagarcoil due to Fany Cyclone Announcement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X