கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீனவர்கள் என்றால் ஏமாற்றுவீர்களா? விடமாட்டோம்.. வாக்களித்தே தீருவோம்.. குமரியில் மக்கள் கொந்தளிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்காளர் பட்டியலில் மாயமான 1000 மீனவர்களின் பெயர்கள்-வீடியோ

    கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 1000க்கும் அதிகமான மீனவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் கண்டிப்பாக வாக்களித்தே தீருவோம் என்று மீனவர்கள் உறுதியாக கூறி இருப்பதால் கன்னியாகுமரியில் கொதிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராமத்தில் உள்ள பெரும்பாலான வாக்காளர்களின் பெயர்கள் இப்படி விடுபடுவது இதுவே முதல்முறையாகும்.

    அதிகாரிகளின் இந்த அலட்சியத்தை எதிர்த்து அங்கிருக்கும் மீனவர்கள் எல்லோரும் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

    முன்விரோதம்.. ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை.. மதுரையில் பயங்கரம் முன்விரோதம்.. ஓட்டு போட வந்த திமுக பிரமுகர் வெட்டி கொலை.. மதுரையில் பயங்கரம்

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    ஆனால் இதில் 1000க்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் மாயமாகி இருக்கலாம். 1000 என்பது குறைவுதான் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக மீனவர்கள் எல்லோரும் தூத்தூர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் தற்போது போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போலீஸ் லிஸ்ட்

    போலீஸ் லிஸ்ட்

    பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக யாருடைய வாக்குப்பதிவு மறுக்கப்பட்டு இருக்கிறது என்று போலீசார், மீனவர்களிடம் லிஸ்ட் கேட்டு உள்ளனர். அனைத்து மீனவர்களும் இதில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என்று போலீசார் லிஸ்ட் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் மீனவர்கள் 1000 பேரும் இது போல கையெழுத்திட்டு அளிப்பதற்குள் தேர்தலே முடிந்துவிடும் என்று மீனவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    மீனவர்கள் பிரச்சனை

    மீனவர்கள் பிரச்சனை

    இதில் சில மீனவ குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் வெளிநாட்டில் இருந்து கூட வாக்களிப்பதற்காக வந்துள்ளனர். சென்ற தேர்தலில் வாக்களித்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது என்றால் என்ன அர்த்தம். இதில் எதோ மர்மம் இருக்கிறது. இதனால் உடனடியாக மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    எல்லோரும் முக்கியம்

    எல்லோரும் முக்கியம்

    எல்லோரும் ஓட்டு போட வேண்டும். அடிப்படை உரிமை என்று கூறுகிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம். எங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. ஆனால் வாக்களிக்க அனுமதிக்கவில்லை. குமரியின் ஆட்சியர் எங்களுக்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்று அங்குள்ள மீனவர்கள் குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.

    அறிவு இல்லை

    அறிவு இல்லை

    இதுகுறித்து கருத்து தெரிவித்த பெண் ஒருவர், நாங்கள் மீனவர்கள் என்பதால் எங்களை ஏமாற்றிவிடலாம். எங்களுக்கு அறிவு இல்லை என்று நினைத்துவிட்டார்கள். அதெல்லாம் அந்த காலம். கடலோர மக்கள் இதை விட மாட்டோம். எங்களோட உரிமையை அடைந்தே தீருவோம். இதன் அர்த்தம் எங்களுக்கு புரிய வேண்டும், என்று மிக கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    Lok Sabha Election 2019: Fisherman protesting against the EC after their name missing from voters list in Kanniyakumari
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X