கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி விழாவில் அவமானம்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா... அசால்ட் காட்டிய தளவாய்சுந்தரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    தளவாய் சுந்தரத்தை மேடையிலிருந்து கீழே இழுத்துச் சென்ற பாடிகார்ட்-வீடியோ

    கன்னியாகுமரி: பிரதமர்,முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பாதுகாப்புப்படை வீரர்கள் என்னை தடுத்தது பெரிய விஷயமே இல்லை என்று தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.

    பிரதமர் மோடி மார்ச் 1ம் தேதி கன்னியாகுமரியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார். அப்போது அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு திட்டங்கள் தொடர்பாக விளக்கம் அளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    அந்த சமயத்தில் அவர்களுடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரமும் இருந்தார். அப்போது பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தளவாய் சுந்தரத்தை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

    சர்ச்சையான வீடியோ

    சர்ச்சையான வீடியோ

    அவர்களின் இந்த நடவடிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தையும் பதிவுசெய்தனர்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    Exclusive: பாஜகவை எதிர்க்க திமுகதான் சரியான சாய்ஸ்.. கூட்டணி வெல்லும்.. காதர் மொய்தீன் நம்பிக்கை Exclusive: பாஜகவை எதிர்க்க திமுகதான் சரியான சாய்ஸ்.. கூட்டணி வெல்லும்.. காதர் மொய்தீன் நம்பிக்கை

    தளவாய் சுந்தரம் பேட்டி

    தளவாய் சுந்தரம் பேட்டி

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    நலத்திட்ட உதவிகள்

    நலத்திட்ட உதவிகள்

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமரி வந்து மாவட்ட மக்கள், மீனவர்களுக்கு, ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு செய்த நலத்திட்டங்களை விளக்கினார். குமரியில் சுமார் 1.5 லட்சம் மீனவர்கள் உள்ளனர்.

    பிரதமரிடம் கோரிக்கை

    பிரதமரிடம் கோரிக்கை

    பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பதற்காக, ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர், முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், பாதுகாப்புப்படை வீரர்கள் என்னை தடுத்தது பெரிய விஷயமே அல்ல.

    அடையாளம் தெரியவில்லை

    அடையாளம் தெரியவில்லை

    ஏனெனில், பாதுகாப்புக்கு இருக்கும் காவல் துறையினர் மாறிக்கொண்டே இருந்தனர். அதனால், அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.

    வெற்றி கூட்டணி

    வெற்றி கூட்டணி

    அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து, மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி என்று தெரிவித்தார்.

    English summary
    The Special Representative of the Government of Tamil Nadu, thalavai Sundaram said that the security forces had prevented me from participating in the program. Ididnt worry about that he added.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X