கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பணநெருக்கடியில் பச்சைமால்... அமமுக டூ மீண்டும் அதிமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    Pachaimal is rejoining aiadmk | பணநெருக்கடியால் மீண்டும் அதிமுகவில் இணையும் பச்சைமால்

    கன்னியாகுமரி: முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமமுக செயலாளருமான பச்சைமால் அதிமுகவில் சேரவிருப்பது டிடிவி தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    பச்சைமாலுடன் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனும் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறார்.

    பச்சைமால், நாஞ்சில் முருகேசன் ஆகிய இருவரையும் தினகரன் தரப்பில் இருந்து சமாதானம் செய்யப்பட்டும் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

    வன்னியர்கள் ஒன்றுபட்டால்... ஆட்சியை பிடிக்கமுடியும் -அன்புமணி ராமதாஸ்வன்னியர்கள் ஒன்றுபட்டால்... ஆட்சியை பிடிக்கமுடியும் -அன்புமணி ராமதாஸ்

    வனத்துறை அமைச்சர்

    வனத்துறை அமைச்சர்

    ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் கன்னியாகுமரியை சேர்ந்த பச்சைமால். மாவட்டச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு குமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றதால் பச்சைமாலிடம் இருந்து அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டன.

    தினகரன் ஆதரவு

    தினகரன் ஆதரவு

    தன்னிடம் இருந்த அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்ததற்கு 2011-2016 காலகட்டத்தில் அதிமுகவில் செயல்பட்ட ஐவர் அணி தான் காரணம் எனக் கருதினார் பச்சைமால். ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், ஆகியோர் மீது கோபமாக இருந்த பச்சைமால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி பிளவுபட்ட போது தினகரன் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார்.

    மாவட்டச் செயலாளர்

    மாவட்டச் செயலாளர்

    டிடிவி தினகரனும் பச்சைமாலுக்கு உரிய மரியாதை அளித்து கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவியெல்லாம் அளித்திருந்தார். தளவாய் சுந்தரம் தன்னை விட்டுச் சென்ற போது கூட, பச்சைமால் பக்கபலமாக இருக்கும் போது எனக்கென்ன கவலை எனக் கூறினார் தினகரன். அந்தளவுக்கு தினகரனின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெற்றிருந்த பச்சைமால் மீண்டும் அதிமுகவில் இணையவுள்ளார்.

    பண நெருக்கடி

    பண நெருக்கடி

    இது குறித்து குமரி மாவட்ட அதிமுக நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசியபோது, பச்சைமால் பணநெருக்கடியில் உள்ளார். அவரால் தொடர்ந்து அமமுக நிகழ்ச்சிகளுக்கு செலவழிக்கமுடியவில்லை. இதனால் தினகரனும் அவருக்கு உரிய மரியாதை தரவில்லை. இதனிடையே மீண்டும் அதிமுகவுக்கு வருமாறு நாங்க அழைப்பு விடுத்தோம். அவர் யோசித்து இப்போது அதிமுகவில் இணையும் முடிவை எடுத்திருக்கிறார் எனத் தெரிவித்தார்.

    English summary
    Former Minister Pachaimal is rejoining the AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X