கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தக்கலை மருத்துவனையில் தடுப்பூசி போடாத முன்கள பணியாளர்கள்...எலக்ட்ரீஷியனுக்கு தடுப்பூசி!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு தலைமை மருத்துவனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்கள பணியாளர்கள் வராததால், அந்த மருத்துவமனை எலக்ட்ரீஷியனுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் வற்புறுத்த கூடாது. ஆனால் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறினார்.

front line workers not vaccinated at Thakkala Hospital

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சுகாதார, மருத்துவ, முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.தமிழகத்திலும் தடுப்பூசி போடும் பணி இன்று முழுவதும் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தக்கலை அரசு தலைமை அரசு மருத்துவனை மற்றும் குழித்துறை மருத்துவமனை உள்பட 4 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது.

வூஹான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா.. சந்தேகிக்க காரணங்கள் உள்ளன.. மைக் பாம்பியோ பகீர் தகவல்வூஹான் ஆய்வகத்தில் இருந்தே கொரோனா.. சந்தேகிக்க காரணங்கள் உள்ளன.. மைக் பாம்பியோ பகீர் தகவல்

தக்கலையில் உள்ள அரசு தலைமை மருத்துவனையில் தடுப்பூசி போடுவதற்காக 100 சுகாதார பணியாளர்கள் பெயர் பட்டியல் கொடுக்கபட்டு இருந்தது. இதில் 86 பேருக்கு தடுப்பூசி போடும் அறிவிப்பு வந்து இருந்தது. இந்த நிலையில் தக்கலை அரசு தலைமை மருத்துவனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்கள பணியாளர்கள் வரவில்லை.

இதனால் அந்த மருத்துவமனையில் எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் தற்காலிக ஊழியர் ராஜேஷ்(32) என்பவர் தடுப்பூசி போட முன் வந்தார். அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்கள பணியாளர்கள் வரவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் வற்புறுத்த கூடாது. ஆனால் விருப்பம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றார்.

English summary
Kanyakumari District Thakkala Government General Hospital vaccinated the hospital electrician as the front staff did not come to vaccinate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X