கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாலையில் போராட்டம்... வானில் கருப்பு பலூன்கள்... மோடிக்கு எதிராக மாஸ் காட்டிய மதிமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ போராட்டம்- வீடியோ

    குமரி: பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிரப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தங்கள் எதிர்ப்பை மதிமுகவினர் காட்டினர்.

    நெல்லை காவல்கிணறுவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த போராட்டத்தில் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசாருக்கும் மதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    Go Back Modi: The sky circulates black balloons against Modi

    காமராஜர், கருணாநிதி போராடிப் பெற்ற அனைத்தையும் அழிக்கப் பார்க்கிறார்கள்... வைகோ ஆவேசம் காமராஜர், கருணாநிதி போராடிப் பெற்ற அனைத்தையும் அழிக்கப் பார்க்கிறார்கள்... வைகோ ஆவேசம்

    காவிரி மேலாண்மை வாரியம், நீட்தேர்வு, ஸ்டெர்லைட் போன்றவற்றினால் கொதித்து போய் இருந்த சமயத்தில்தான் போன வருஷம் மோடி தமிழகம் வந்தார். எங்கே பார்த்தாலும் கருப்பு மயம் என்ற அளவுக்கு விதம் விதமான முறையில் கருப்பு நிறத்தைக் காட்டி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

    திமுக உள்ளிட்ட கட்சிகள் இதில் முன்னணி வகுத்தன. "கோ பேக் மோடி" என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு இருந்தது. அதை விட கருப்பு பலூனைப் பறக்க விட்டு புதிய பரபரப்பையும் ஏற்படுத்தினர்.

    இந்த நிலையில், கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட வராத பிரதமர் மோடி தற்போது அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அடிக்கடி தமிழகம் வருவதை கண்டித்து மதிமுக சார்பில் தொடர்ந்து கருப்புக்கொடி போராட்டம் நடைபெற்றது.

    திரும்ப திரும்ப பேசுற நீ... மீண்டும் வைரலாகும் கோ பேக் மோடி.. தேசிய அளவில் நம்பர் 1! திரும்ப திரும்ப பேசுற நீ... மீண்டும் வைரலாகும் கோ பேக் மோடி.. தேசிய அளவில் நம்பர் 1!

    அந்த வகையில், இன்று "GobackModi" என மறுப்படியும் கருப்பு பலூன்களை மதிமுகவினர் வானில் பறக்க விட்டுள்ளனர். பின்னர், வைகோ மற்றும் நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அதேசமயம், பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

    இதற்கிடையே, நாகர்கோவிலில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    English summary
    black flag against Prime Minister Narendra Modi In Kanyakumari
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X