கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எச். ராஜா மேடையில் பேசியதை.. மாடியிலிருந்து செல்போனில் படம் பிடித்த இளைஞர்.. எதற்காக எடுத்தார்?

எச்.ராஜாவை படம் பிடித்தால் பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: எச்.ராஜா மேடையில் பேசுவதை, மாடியில் இருந்து தன் செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரால் திருவட்டார் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது!

நாடு முழுவதும் தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர்களும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 h raja meeting in kanniyakumri

எனினும் இதே தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாடு முழுவதும் பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது.. இதற்காக நோட்டீஸ்கள் வழங்கி, பேரணி நடத்தி ஆதரவு கருத்துக்களை பரப்பி வருகிறது.

அந்த வகையில், திருவட்டார் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் பொதுகூட்டம் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் இந்த விழா நடந்தது.. இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளரும் கட்சியின் மூத்த தலைவருமான எச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தில் எச்.ராஜா பேசிக்கொண்டிருந்த போதே, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் மாடியில் இருந்து இளைஞர் ஒருவர் எச்.ராஜா பேச்சை செல்போனில் வீடியோ எடுத்தார்.. இதை பாஜக தொண்டர்கள் சிலர் பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டுது.. வீடியோ எடுக்கக்கூடாது என்ற விதத்தில் சர்ச்சை நிலவியது.

ஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியாஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா

மேலும் போலீசார் அந்த இளைஞரை பிடித்து அவரது செல்போனை வாங்கி பார்த்தனர்.. அதில் எச்.ராஜா அதுவரை மேடையில் பேசியிருந்த பேச்சு பதிவாகி இருந்தது தெரிய வந்தது. அவரை குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த கூட்டம் முடிந்த பிறகு, பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட களியக்காவிளை சிறப்பு எஸ்ஐ வில்சன் வீட்டிற்கு எச்.ராஜா சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார்.

English summary
h raja meeting in kanniyakumri and an youth took video of H Raja's speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X