கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காமராஜர், கருணாநிதி போராடிப் பெற்ற அனைத்தையும் அழிக்கப் பார்க்கிறார்கள்… வைகோ ஆவேசம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ போராட்டம்- வீடியோ

    குமரி: காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டி உள்ளார்.

    நெல்லை காவல்கிணறுவில் நடந்த போராட்டத்தின்போது, பாஜகவை சேர்ந்த சிலர் நடத்திய தாக்குதலைப் பொருட்படுத்தாமல் வைகோ போராட்டத்தை தொடர்ந்தார்.

    அப்போது, வேனில் நின்றபடி ஆவேசமாக பேசிய வைகோ கருப்பு பலூன்களைப் பறக்க விட்டார். கருப்பு பலூன்களைப் பறக்க விட்டு போராட்டம் நடத்தியதால் பாஜகவினர் மற்றும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    [Read more: ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க... மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு சீமான் அழைப்பு]

    ஆய்வுக்கு அனுமதி

    ஆய்வுக்கு அனுமதி

    இதனைத் தொடர்ந்து பேசிய வைகோ, அதானி, அம்பானி கம்பெனிகள் கொள்ளையடிக்க வழிவகுத்தவர்தான் மோடி என்று விமர்சனம் செய்தார். மேலும், காவேரி அணையின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முடிவு செய்து விட்டார்கள் என்று கூறிய வைகோ, மத்திய அரசு திட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுத்து விட்டது என்றார்.

    அதிர்ச்சித் தகவல்

    அதிர்ச்சித் தகவல்

    முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட திட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுத்து விட்டனர் என்றும், இது நடந்தால் பென்னி குக் கட்டிய அணை இடிக்கப்பட்டுவிடும் எனவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

    அழிக்கப் போகிறார்கள்

    அழிக்கப் போகிறார்கள்

    காமராஜர், கருணாநிதி போராடிப் பெற்ற அனைத்தையும் அழிக்கப் போகிறார்கள் என்று கொந்தளிப்பை வெளிப்படுத்திய வைகோ, இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து இந்துத்துவாவை பரப்பி வருகிறார்கள் என்று கவலை தெரிவித்தார்.

    பயந்தவன் கிடையாது

    பயந்தவன் கிடையாது

    பிரதமருக்கு எதிரான போராட்டத்தின்போது கல்வீச்சு சம்பவம் நடந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது துப்பாக்கிச் சூட்டுக் எல்லாம் பயந்தவன் நான் கிடையாது என்றும் வைகோ தெரிவித்தார்.

    English summary
    BJP Trying To destroy everything Of Kamarajar and Karunanidhi Achievements: Vaiko angrame
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X