கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொங்குகிறது குமரி கடல்.. விடிய விடிய மிரட்டிய மழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. பீதியில் மீனவர்கள்!

விடிய விடிய கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்துள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரி மாட்டத்தில் விடிய விடிய மழை-வீடியோ

    சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்துள்ளது. கடலோர பகுதிகளில் அலைகள் சீறி எழுவதால் மீனவர்கள் பயத்தில் உறைந்து உள்ளனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவ மழைதொடங்கி விட்டது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருவதால், தமிழகத்தின் தென்மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக குமரி மாவட்டத்தில் நேற்று நல்ல மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.

    வீசப்போகிறது புயல்.. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. பலத்த மழைக்கு வாய்ப்பு!வீசப்போகிறது புயல்.. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. பலத்த மழைக்கு வாய்ப்பு!

    வெள்ளக்காடு

    அதிலும் கடலோர பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பொழிந்தது. விடிய விடிய பெய்த இந்த மழையால், குமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுமே வெள்ளக்காடாக மாறி உள்ளது.

    நீர்மட்டம்

    குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல, பேச்சிப்பாறை அணைக்கும் நீர்வரத்து அதிகமாகி, நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.

    வாழை, தென்னை

    மாவட்டம் முழுவதும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அடித்து வீசிய சூறைக்காற்றினால், வாழைகள், தென்னை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

    கடல் அரிப்பு

    கடலோர பகுதிகளில் அலைகள் சீறி எழுந்து வருகின்றன. இதனால் கடற்கரை பகுதி மீனவர்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஆங்காங்கே கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளதால் கரையோர மணல் மேடுகள் அலைகளால் இழுத்து செல்லப்பட்டு வருகின்றன. இது மீனவர்களுக்கு மேலும் பயத்தை தந்துள்ளது.

    English summary
    Kanniyakumari District heavy rain in night time due to Southwest Monsoon
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X