கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியில் இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழை.. என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?!

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரி மாட்டத்தில் விடிய விடிய மழை-வீடியோ

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்க்கிறது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் கடந்த 8ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

    அதேபோல் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் கனமழை கொட்டி வருகிறது. மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    புயலே வந்தாலும் மழை இல்லையே.. இந்த 10 மாவட்டங்களில் அடிக்க போகுது அனல் காற்று புயலே வந்தாலும் மழை இல்லையே.. இந்த 10 மாவட்டங்களில் அடிக்க போகுது அனல் காற்று

    வெளுத்துவாங்கும் மழை

    வெளுத்துவாங்கும் மழை

    கன்னியாகுமரியின் களியக்காவிளை, குழித்துறை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று திற்பரப்பு, முஞ்சிறை, கோதையார், திருவட்டார், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தக்கலை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

    இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் தற்போது கொட்டித்தீர்க்கும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் இடைவிடாமல் கொட்டும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 3 நாட்களில் மட்டும்

    தொடர் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாராங்கள் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 500 மில்லி மீட்டருக்கு மேல் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.

    கடல் சீற்றம்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. மேலும் கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பீதியடைந்துள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    தற்போது விளாசி வருகிறது

    தற்போது விளாசி வருகிறது

    இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும் கன மழை கொட்டி வருவதாக தனியார் வானிலை அறிவிப்பாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போது அதிக மழை அடித்து பெய்துவருவதாகவும் அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியிலும் பெய்யும்

    தூத்துக்குடியிலும் பெய்யும்

    மேலும் நெல்லை, தேனி, நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்துவருவதாக அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய உதவும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamilnadu weatherman has said No stopping Kanyakumari District with 3rd day of heavy rainfall reported and more rains lashing right now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X