கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் - கிராமங்கள் துண்டிப்பு

கனமழை காரணமாக குமரி மேற்கு மாவட்டத்தின் மலை கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் விடாமல் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மோதிரமலை, தச்சமலை, முடவன் பொற்றை, கல்லாறு உள்பட 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாக மாறியுள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் நகர் பகுதிக்கு வர முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Heavy rains in Kanyakumari have caused rivers to overflow and villages to be cut off

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளில் இடைவிடாத மழை பெய்தது. இதனால் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்தது. சுமார் 50 ஆயிரம் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. வைக்கலூர், கலிங்கராஜபுரம், பள்ளிக்கல், தோவாளை, சுசீந்திரம் என பல பகுதிகளிலும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டன. குளங்கள், கால்வாய்கள் உடைந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் நிலங்கள் சேதமடைந்தன. குமரியின் மழை சேதங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 15ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருவது மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

70% கூடுதலாக கொட்டிய வடகிழக்குப் பருவமழை - விடாமல் வெளுக்கும் மழையால் தமிழகம் தத்தளிப்பு70% கூடுதலாக கொட்டிய வடகிழக்குப் பருவமழை - விடாமல் வெளுக்கும் மழையால் தமிழகம் தத்தளிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு கன்னியாகுமரியில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை முதல் குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகாலையில் தொடங்கிய மழை நாள் முழுவதும் விடாது பெய்தபடி இருந்தது. கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, களியக்காவிளை, குலசேகரம், திருவட்டார், பேச்சிப்பாறை, பூதப்பாண்டி என மாவட்டம் முழுவதும் மழை பெய்தபடி இருந்தது.

மலைப்பகுதியில் பெய்யும் மழையுடன், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் மற்றும் அனைத்து அணைகளுக்கும் வரும் நீரின் அளவும் அதிகரித்தது.
அணைகள் அனைத்தும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியிருந்ததால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீருடன், மழை வெள்ளமும் சேர்ந்து கொள்ள குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மலை கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியது. கோதையாறு, குற்றியாறு பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக மோதிரமலை, தச்சமலை, முடவன் பொற்றை, கல்லாறு உள்பட 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தீவுகளாக மாறியுள்ளன.

தரை பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் மலைகிராமங்களில் வசிக்கும் மக்கள் நகர் பகுதிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின்போதும் இக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்கு ஆளானார்கள். இந்த நிலையில் இப்போது பெய்து வரும் மழையால் மீண்டும் இந்த கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

மழை விடாமல் கொட்டி வருவதால் அதிக வெள்ளம் வர வாய்ப்புள்ளது எனவே ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்து உள்ளார். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

குமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி வருகிறது. இதுவரை 1050 வீடுகள் இடிந்துள்ளன. இப்போது மீண்டும் மழை பெய்து வருவதால் நேற்றும் ஒரே நாளில் 26 வீடுகள் இடிந்தன. இதில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 26 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 6 வீடுகளும் என மொத்தம் 26 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Recommended Video

    School Leave | Tamilnadu Rain Update | Tamilnadu Weatherman | Chennai Rain | Oneindia Tamil

    குமரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    English summary
    Heavy rains in Kanyakumari have caused rivers to flood and ground bridges to overflow. Twelve hill villages, have been cut off, making it impossible for people to reach the city.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X