கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

5 ஆண்டுகளாக முகமது யாசினுடன் காதல்.. கணேஷை திருமணம் செய்தும் விட மனமில்லாத காயத்ரி!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்றதாக கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவில் மாவட்டம் வெட்டூர்ணிமடம் அருகே கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (38). புகைப்பட கலைஞர். இவருடைய மனைவி காயத்ரி (35). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேஷ் கடுமையாக தாக்கப்பட்டார்.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். மனைவி காயத்ரியே கள்ளக்காதலால் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து காயத்ரி, கூலிப்படையை சேர்ந்த கருணாகரன், விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.

"ஹேட்ஸ் ஆப் பிரியங்கா".. லத்தியை பாய்ந்து தடுத்து.. களமிறங்கினால் பாஜக என்னாகும்.. திக் திக் சர்வே

கணேஷை கொல்ல முயற்சி

கணேஷை கொல்ல முயற்சி

கணேஷை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்ட காரணமாக இருந்த காயத்ரியின் கள்ளக்காதலன் மதுரையைச் சேர்ந்த முகமது யாசினை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் முகமது யாசின் மதுரையில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரு மாதங்களாக தலைமறைவாக இருந்த முகமது யாசினை போலீஸார் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர்.

திருமணமாகி ஒரு குழந்தை

திருமணமாகி ஒரு குழந்தை

அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் அவர் பல்வேறு தகவல்களை கூறினார். மதுரையை பூர்வீகமாக கொண்ட அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகர்கோவிலில்தான் வசித்து வந்தார். அந்த சமயத்தில் காயத்ரிக்கும் முகமது யாசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் முகமது யாசினுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது தெரியவந்தது.

கணேஷுடன் திருமணம்

கணேஷுடன் திருமணம்

இந்த நிலையில் பீச் ரோடு பகுதியில் மழலையர் பள்ளியை முகமது யாசின் தொடங்கியுள்ளார். அங்கு பள்ளிக்கு காயத்ரியை மேலாளராக நியமித்துள்ளார். இவருடைய காதல் விவகாரம் காயத்ரியின் குடும்பத்தாருக்கு தெரியவந்ததை அடுத்து உடனடியாக மாப்பிள்ளை பார்த்து காயத்ரிக்கு கணேஷை கட்டி வைத்துள்ளார்கள்.

யாசின்

யாசின்

திருமணத்திற்கு பிறகும் இந்த காதல் கள்ளக்காதலாக தொடர்ந்துள்ளது. தினமும் யாசினுடன் காயத்ரி செல்போனில் பேசி வந்துள்ளார். தனது கணவன் வீட்டை அடமானம் வைத்து ரூ 10 லட்சத்தை முகமது யாசினுக்கு கொடுத்துள்ளார். இந்த பணம் குறித்து காயத்ரியிடம் கணேஷ் கேட்ட போதுதான் ஆட்களை வைத்து கொள்ள பார்த்துள்ளார். இதையடுத்து கைதான யாசினை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

English summary
Woman and her paramour arrested in Nagercoil for murder attempt on her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X