கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிலாவிற்கு ரோபோ.. ஹீலியம் எடுக்க மாஸ் திட்டம்.. வேற லெவலில் பிளான் போடும் இஸ்ரோ!

ரோபோ ஒன்றை நடப்பாண்டில் சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ரோபோ ஒன்றை நடப்பாண்டில் சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்தியா சந்திரனில் மனிதனை அனுப்புவதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக 2021 இறுதியில் விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது.

இதற்கு மத்தியில் சந்திரன் தொடர்பான ஆய்வுகளையும் தனியாக இஸ்ரோ செய்ய உள்ளது. அதன் ஒருபடியாக சந்திரனுக்கு ரோபோ ஒன்றை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி ஏ. சிவதாணுபிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். பல்வேறு எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், உலக நாடுகளின் பட்டியலில் விண்வெளிக்கு ராக்கெட் ஏவுவதில் இந்தியா இன்று 4வது இடத்தில் உள்ளது. விரைவில் இந்தியா அதில் மேலும் முன்னேறும்.

அரியவகை மூலப்பொருள்

அரியவகை மூலப்பொருள்

தற்போது சந்திரனில் மனிதனை அனுப்புவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் இப்போதே தொடங்கிவிட்டது. விரைவில் இந்த பணிகள் வேகம் எடுக்கும். அதன் முயற்ச்சியாக விரைவில் ரோபோ ஒன்று அனுப்பபடுகிறது. இந்த வருடம் இந்த பணிகள் முடிவடையும்.

ஏன் தெரியுமா

ஏன் தெரியுமா

தற்போது நடைபெற்றுவரும் ஆய்வில் சந்திரனில் ஹீலியம் வாய்வு அதிகமாக காணப்படுகிறது. இது அரிய வகை மூல பொருளாகும் என தகவல் கிடைத்திருக்கிறது. ஒரு கிராம் ஹீலியம் வாயு 1000, யுரோனியத்திற்கு சமமானதாகும் ஹீலியம் கதிர்வீச்சற்றது. இது பல வகைகளில் மக்களுக்கு பயன்படும். அதனால் பாதுகாப்பானதாகும்.

வரும்

வரும்

அதனை சந்திரனில் இருந்து கொண்டுவர இங்கிருந்து ரோபா ஒன்றை சந்திரனுக்கு அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது. அங்கிருந்து ஹீலியமை சேகரித்து இது பூமிக்கு பாதுகாப்பாக கொண்டு வரும். அதை இஸ்ரோ ஆராய்ச்சி செய்யும். அதன் பின் மனிதனை சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் இஸ்ரோ செயல்படும். இதில் நாம் ரஷ்யாவோடு இணைந்து செய்லபடுவோம்.

ரஷ்யா உடன்

ரஷ்யா உடன்

நம்மால் உருவாக்கப்பட்ட ப்ரோமஸ் ஏவுகணை உலகிலேயே அதிகம் வேகம் கொண்டது.தற்போது அதை விட ஏழு மடங்கு வேகம் அதிகம் கொண்ட மணிக்கு 7 ஆயிரம் கி,மீ வேகம் கொண்ட ஏவுகணை தயாரிக்கும் பணிகளில் தீவீரமாக ஈடுபட்டு உள்ளோம். விரைவில் அது குறித்து தெரிவிக்கப்படும். அந்தவகையில் இந்தியா செயற்கைக்கோள் செலுத்துவதில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம் பெற்று உள்ளது என்று அவர் கூறினார்.

English summary
ISRO will launch a Robot to the moon by this year end to extract Helium.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X