கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்.. சிறப்பு எஸ்.ஐ. வில்சன் மரணம் திட்டமிட்ட படுகொலை.. கேரள போலீஸ் ஷாக்

Google Oneindia Tamil News

Recommended Video

    குமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் எடப்பாடி - வீடியோ

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லையையொட்டிய களியாக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிட்ட படுகொலை என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கன்னியாகுமரி களியாக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கடந்த 8-ந் தேதி 2 பேர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்.

    இது தொடர்பான விசாரணையில் வில்சனை படுகொலை செய்தது தெளபீக், அப்துல் சமீம் ஆகியோர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையில் புகைபடத்தை வெளியிட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    குமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் எடப்பாடிகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் எடப்பாடி

    அப்துல் சமீம்

    அப்துல் சமீம்

    இந்த படுகொலையில் தொடர்புடைய தெளபீக், அப்துல் சமீம் குறித்து கேரளாவில் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடமாடிய வீடியோ

    நடமாடிய வீடியோ

    இந்நிலையில் சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை செய்யப்படுவதற்கு நடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு குற்றவாளிகள் இருவரும் திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரை பகுதியில் நடமாடிய வீடியோ போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.

    பை கைமாறி இருக்கு

    பை கைமாறி இருக்கு

    அவர்கள் ஒரு ஆட்டோவில் வந்து கொலை செய்து விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள். கொலை நடப்பதற்கு முன்பு இரண்டு நாட்கள் நெய்யாற்றங்கரையில் வசித்து வந்திருக்கிறார்கள். அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு அடிக்கடி சென்று வந்து இருக்கிறார்கள். இவர்கள் கொலை செய்ய ஆட்டோவில் ஏறிய நேரத்தில் கையில் இருந்த கை பை அதன் பிறகு காணவில்லை . அந்த பையில் என்ன இருந்தது அந்த பை யாருக்கு கை மாற்றப்பட்டது என்பது குறித்து தகவல்கள் இல்லை.

    போலீசார் தகவல்

    போலீசார் தகவல்

    அன்றைய தினம் கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வந்த காரணத்தால் ஆட்டோவுக்கு 400 ரூபாய் வாடகை கொடுத்து இருக்கிறார்கள். அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதை எல்லாம் சுட்டிக்காட்டியுள்ள கேரள போலீசார், திருவனந்தபுரத்தில் வைத்து சதி திட்டம் தீட்டி சிறப்பு எஸ்.ஐ. வில்சனை குற்றவாளிகள் இருவரும் கொன்று இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    kerala police report that kanniyakumar si wilson death is planned murder, plans from thiruvananthapuram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X